18.09.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 02ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

2016-09-18 09:13:48

கிருஷ்ணபட்ச துவிதியை திதி முன்னிரவு 9.11 வரை. பின்னர் திரிதியை திதி. ரேவதி நட்சத்திரம் பின்னர் 4.33 வரை. அதன் மேல் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை அமிர்தசித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரம். சுபநேரங்கள்: காலை 7.45 – 8.45, பகல் 10.45 – 11.45, மாலை 3.00 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)

மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : அன்பு, ஆதரவு

கடகம் : இன்பம், சுகம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : நட்பு, உதவி

விருச்சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : வெற்றி, யோககம்

மகரம் : லாபம், லஷ்மீகரம்

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : சோதனை, சங்கடம்

நம்மாழ்வார் பாசுரம். ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய் மொழி “உருவாகிய ஆறு சமயங்கட்கெல்லாம் பொருவாகி நின்றன் அவன் எல்லா பொருட்டும் அருவா

கிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் கருவா

கிய கண்ணனைக் கண்டு கொண்டேனே”. பொருளுரை: உருவாகிய ஆறு சமயங்க

ளிலும் அவனே ஊடுருவி கிடக்கின் றான். எல்லா பொருளிலும் அந்தராத் ரமாக இருக்கும் முதல்வனை, தேவர்களுக் கெல்லாம் தோன்றுவதற்கு காரணமாயிருந்த அந்த பரந்தாமனை, கீதாச்சாரியனை என்

நெஞ்சில் தரிசித்தேன். (ஆழ்வார் திருவடி களே சரணம்)

(“அவதூறு யாதொரு பாவமும் அறியாதவர் களைக்கூட நெஞ்சகத்தை இழக்கச் செய் கிறது". – நெப்போலியன்.)

செவ்வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 5, 6, 9

பொருந்தா எண்கள் : 2, 8

அதிர்ஷ்ட வர்ணம் :சிவப்பு, நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right