17.09.2016 துர்முகி வருடம் தட்சிணாயனம் வர்ஷருது புரட்டாதி (கன்யா) மாதம் 01ஆம் நாள் சனிக்கிழமை.

2016-09-17 09:36:25

சுபயோகம்

17.09.2016 துர்முகி வருடம் தட்சிணாயனம் வர்ஷருது புரட்டாதி (கன்யா) மாதம் 01ஆம் நாள் சனிக்கிழமை.

கிருஷ்ணபட்ச பிரதமை திதி முன்னிரவு 11.22 வரை. அதன் மேல் துவிதியை திதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 7.18 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம் மரண யோகம் காலை 7.18 வரை அதன்மேல் சித்தயோகம் மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.00 – 4.00, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30. வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) கன்யாரலி புரட்டாதி மாத பிறப்பு. புரட்டாதி முதல் சனி வாரம். மகாளயபட்ச ஆரம்பம். நட்சத்திர அபமனம்.

மேடம்: அதிர்ஷ்டம், விருத்தி

இடபம்: தனம், சம்பத்து

மிதுனம்: உயர்வு, மேன்மை

கடகம்: நலம், ஆரோக்கியம்

சிம்மம்: ஓய்வு, அசதி

கன்னி: நன்மை, யோகம்

துலாம்: இன்பம், மகிழ்ச்சி

விருச்சிகம்: மறதி, விரயம்

தனுசு: அமைதி, நிம்மதி

மகரம்: ஜெயம், புகழ்

கும்பம்: அமைதி, தெளிவு

மீனம்: முயற்சி, முன்னேற்றம்

நம்மாழ்வார் பாசுரம். ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய் மொழி “அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால் குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும். மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்! பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே”. பொருளுரை: அன்று மழையிலிருந்து பசுக்களைக் காக்க கோவர்தன கிரியை குடையைக் குடையாய் எடுத்தவனே! நாய் தன் குட்டையான வாலை ஆட்டி தன் எண்ணத்தை தெரிவிப்பதுபோல் என் உள்ளத்து உணர்ச்சிகளை நாய் போன்ற அடியேன் பாடி அழைத்து புலப்படுத்துகின்றேன்! உன் திருவருள் கிடைக்கவில்லையே என்று கலங்குகின்றேன் என் துவாரகைக் கண்ணனே. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

 (“பாதி நண்பனைவிட வெளிப்படையான பகைவன்மேல்". – தாமஸ் புல்லர்.)

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், பச்சை, நீலம் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right