15.09.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 30 ஆம் நாள் வியாழக்கிழமை

2016-09-15 09:41:44

சுக்கில பட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 3.02 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 8.59 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம். காலை 8.59 வரை. பின்னர் மரண யோகம். சுபநேரங்கள்: காலை 10.45 – 11.45, பிற்பகல் 12.15 – 1.15, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) மாலை நடராஜர் அபிஷேகம். அறிஞர் அண்ணா பிறந்த நாள்.

மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : சுகம், ஆரோக்கியம்

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : சிக்கல், சங்கடம்

கன்னி : முயற்சி, முன்னேற்றம்

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்சிகம் : லாபம், லக்ஷ்மீகரம்

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : பரிவு, பாசம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : அன்பு, பாசம்

நம்மாழ்வார் திருவாய் மொழி. ஆறாம்பத்து பத்தாம் திருவாய் மொழி. பாசுரம் “அகலகில்லேன் இறையும் என அவர்மேல் மங்கை உரைமார்பா! நிகரில் புகழாய்! உலகமூன்றுடையாய்! என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! புகழ் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!” பொருளுரை: சிறு பொழுதும் பிரியமாட்டேன் என்று மகாலக் ஷ்மி உழையும் திருமார்பை கொண்டவனே! நிகரில்லா கீர்த்தியுடையவனே! மூவுலகிற்கும் உரிமையானவனே! என்னை அடிமை கொண்டவனே! ஒப்பில்லா தேவர்கள், ரிஷிகள் விரும்பும் திருவேங்கடத்தானே! கதியில்லா அடியேன் உன் பாதங்களை சரண டைந்தேனே. (ஆழ்வார் திருவடிகளே சரணம்) சுக்கிரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 6, 9

பொருந்தா எண்கள் : 3, 8

அதிர்ஷ்ட வர்ணம் : அடர்பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right