12.09.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-09-12 08:23:44

சுக்கில பட்ச ஏகாதசி திதி பின்னிரவு 5.38 வரை. அதன் மேல் துவாதசி திதி. பூராடம் நட்சத்திரம் காலை 8.18 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தயோகம் காலை 8.18 வரை. பின்னர் மரண யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சுபநேரங்கள் காலை 6.15 – 7.15, 9.15 – 10.15, மாலை 3.00 – 4.00, ராகு காலம் 7.30 – 9.00,  குளிகை காலம் 1.30– 3.00, எமகண்டம் 10.30 – 12.00 வாரசூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்) சுக்கில பட்ச ஸ்மார்த பரிவர்தன ஏகாதசி. உபவாஸமிருந்து ஸ்ரீமான் நாராயணனை வழிபடல் நன்று. 

மேடம்: நிறைவு, பூர்த்தி 

இடபம்: போட்டி, ஜெயம் 

மிதுனம்: தெளிவு, நிம்மதி 

கடகம்: பகை, பயம் 

சிம்மம்: தனம், லாபம் 

கன்னி: ஈகை, புண்ணியம் 

துலாம்: அன்பு, ஆதரவு 

விருச்சிகம்: லாபம், லஷ்மீகரம் 

தனுசு: நற்செயல், பாராட்டு 

மகரம்: புகழ், செல்வாக்கு 

கும்பம்: பணிவு, புகழ் 

மீனம்: நிறைவு, மகிழ்ச்சி 

நம்மாவாழ்வார் திருவாய் மொழி மூன்றாம் பத்து. பாசுரம் "ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே” பொருளுரை – பாவியான அடியேன் நற்குணங்கள் எதுவும் இல்லாதவனாக உள்ளேன். தேவர்களுக்கும் நித்ய சூரிகளுக்கும் தலைவன் என்று உலகத்தார் உளறிக் கொண்டிருக்கின்றனர். அதுவா புகழ்? திருவேங்கடத்தானனான உன்பாசமெனும் ஜோதி என் மீது அல்லவா படர்கின்றது. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“உன்னை யாரேனும் அவமதித்தால் அவமானத்தை பொறுத்துக் கொள்வது பழி வாங்குவதை விட மேலான தண்டனை அவர்களுக்கு” – செனா)

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right