29.12.2015 மன்மத வருடம் மார்கழி மாதம் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2015-12-29 08:42:02

கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி மாலை 5.44 வரை. அதன் மேல் பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரம் மாலை 3.29 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம் உத்திராடம். சங்கட ஹர சதுர்த்தி விரதம். சுபநேரங்கள் காலை 7.45– 8.45, பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30 எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) 

மேடம்: பொறுமை, அமைதி

இடபம்; நற்செயல், பாராட்டு

மிதுனம்: லாபம், லஷ்மீகரம்

கடகம்: அன்பு, ஆதரவு

சிம்மம்: வரவு, லாபம்

கன்னி: கவனம், எச்சரிக்கை

துலாம்; செலவு, விரயம்

விருச்சிகம்: புகழ், பெருமை

தனுசு: பாராட்டு, செல்வாக்கு

மகரம்: உற்சாகம், ??????

கும்பம்: அன்பு, பாசம்

மீனம்: பக்தி, ஆசி

மார்கழி திருப்பாவை பாசுரம் 13. “ புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை” பொருள் – கொக்கின் வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவனும் பொல்லாங்கு செய்த இராவணனின் பத்து தலைகளையும் அறுத்து அழித்தவனுமான எம் பெருமானின் வீரப் புகழைப்பாடி எல்லாச் சிறுமியரும் பாவைநோன்பு நோ ற்கச் சென்றுவிட்டனர். மாலையில் தோன்றிய நட்சத்திரங்கள் மறைந்துவிட்டன. காலையில் தெரியும் சுக்கிர நட்சத்திரம் மட்டுமுள்ளது. கூட்டில் இருந்து பறவை இரை தேட கூச்சலிட்டபடி செல்வதைப் பார். தாமரை மலரையும் மானையும் ஒத்த விழியுடையவளே! பதுமை போன்றவளே! எங்களோடு கூடி உடல் விறைக்குமளவு நீரில் ????? விளையாடாமல் இப்படியா படுக்கையில் கிடப்பது. கள்ளத் தூக்கத்தைக் கலைத்துவிடு. கண்ணனை பெற்ற நாள் பூர்த்தியாகிவிட்டது” 

(ஆண்டாள் திருவடிகளே சரணம்)

சந்திரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right