08.09.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை.

2016-09-08 08:55:09

சுக்கில பட்ச ஸப்தமி திதி பின்னிரவு 12.15 வரை. அதன் மேல்  அஷ்டமி திதி. அனுஷம் நட்சத்திரம். பின்னிரவு 3.22 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் காலை10.45– 11.45. பிற்பகல் 12.15– 1.15, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் – தெற்கு(பரிகாரம் – தைலம்). சுப முகூர்த்த நாள். குலச்சிறையர் நாயனார் குருபூஜை. 

மேடம்: உண்மை, உயர்வு 

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம் 

மிதுனம்: பகை, பயம் 

கடகம்: பக்தி, ஆசி 

சிம்மம்: சிக்கல், சங்கடம் 

கன்னி: அன்பு, ஆதரவு 

துலாம்: தோல்வி, கவலை 

விருச்சிகம்: மறதி, விரயம் 

தனுசு: வெற்றி, அதிர்ஷ்டம் 

மகரம்: அமைதி, தெளிவு 

கும்பம்: ஊக்கம், உயர்வு

 மீனம்: தனம், சம்பத்து 

நம்மாழ்வார் அருளிய ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி பாசுரம்; “ஆழி ஏழச் சங்கும் வில்லு மெழ திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ, அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி உலகம் கொண்டவாரே! பொருளுரை: பரந்தாமன் திரிவிக்கிரமனாக உலகை அளக்க வளர்த்தபோது வலக்கரத்தில் சுதர்ஸனம் சுழல அடுத்து இடக் கரத்தில் பாஞ்சசன்னியமும் அடுத்ததாக சார்ங்கம் என்னும் வில்லும் தோன்றின. அடுத்து கௌமோதகி என்ற தண்டாயுதமும் நாந்தக மென்னும் வாளும் தெரிய திருமுடி மேலே ஓங்க அதே வேகத்தில் பாதங்கள் விசாலமாக பெருக திருமுடி அண்டத்தின் உச்சியை முட்ட தண்ணீர் குமுழிகள் வெளிப்பட்டன. எல்லா திசைகளிலும் வாழ்த்தொலிகள் முழங்கின. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“கல்வியறிவோடு அடக்கமும் சேர்ந்திருந்தால் அதுவே அணிகளில் எல்லாம் சிறந்த அணி"  சாணக்கியன்.” 

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 6

பொருந்தா எண்கள்: 8 – 7 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சல், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right