28.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 12ஆம் நாள் திங்கட்­கி­ழமை

Published on 2015-12-28 08:26:16

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி மாலை 4.54 வரை. பின்னர் சதுர்த்தி திதி . பூசம் நட்­சத்­திரம் பகல் 2.10 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­தி­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரு­தியை சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம் பூராடம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00 வார­சூலம் கிழக்கு (பரி­காரம்– தயிர்)

மேடம் : திறமை, முன்­னேற்றம்

இடபம் : ஏமாற்றம், கவலை

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் : வருத்தம், நோய்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : லாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : சுகம், இன்பம்

கும்பம் : கவனம், எச்­ச­ரிக்கை

மீனம் : உயர்வு, மேன்மை

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. திருப்­பாவை நோன்பு உற்­சவம். மார்­கழி திருப்­பாவை 12 ஆம் பாசுரம் கனைத்திளங் கற்றொருவை கன்­றுக்­கி­ரங்கி நினைத்து முலை வழியே நின்­றுபால் சோர உரை: கன்றை ஈன்று சில நாட்­களே ஆன எரு­மைகள் கன்­று­களை நினைத்து மனம் இரங்க முலைக்­காம்பு வழியே பால் வழி­கின்­றது. அதனால் வீடெல்லாம் நனைந்து சேறாகும். மிகுந்த தனத்தை உடை­ய­வனின் சகோ­த­ரியே! பனி எங்கள் தலையை நனைக்க உள்­வீட்டு வாசல் கதவை பிடித்துக் கொண்டு, தன் கோபத்தால் இரா­வ­ணனைக் கொன்ற மன­துக்­கி­னி­வ­னான ஸ்ரீ இரா­மனைப் போற்றிப் பாடும்­போது நீ பேசாமல் இருக்­கின்­றாயே. எல்லா வீட்­டி­னரும் உன் பெருந்­தூக்­கத்தை அறிந்து கொண்­டார்கள். இனி­யா­வது எழுந்­திரு. சூரியன் குரு கிர­கங்­க­ளின ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)