29.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-08-29 06:58:05

கிருஷ்ணபட்ச துவாதசிதிதி மாலை 4.10 வரை. பின்னர் திரயோதசி திதி புனர்பூசம் நடசத்திரம் பகல் 11.24 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, மூலம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 7.30  9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் கிழக்கு. (பரிகாரம் – தயிர்) சுபமுகூர்த்த நாள். கிருஷ்ணபட்ச சோம மஹா பிரதோசம். சிவ வழிபாடு சிறப்பானது. செருத்துணையார், திரு நீலகண்ட சிவாச்சாரியார் நாயன்மார் குருபூஜை.

மேடம்: இன்பம், சுகம்

இடபம்: அன்பு இரக்கம்

மிதுனம்: உயர்வு மேன்மை

கடகம்: நட்பு, உதவி 

சிம்மம்: பிரயாணம், அலைச்சல்

கன்னி: நஷ்டம், கவலை

துலாம்: கவனம், எச்சரிக்கை

விருச்சிகம்: லாபம், லஷ்மீகரம்

தனுசு: நற்செயல், பாராட்டு

மகரம்: சுகம், ஆரோக்கியம்

கும்பம்: நலம், நன்மை

மீனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து “கண்ணன் தாலாட்டு” பாசுரம் வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செய் சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே. பொருளுரை: கண்ணனை கொல்லச் சதித் திட்டத்தோடு வந்த பூதகி வஞ்சகமாக பாலூட்ட பாலோடு அவள் உயிரையும் குடித்த கருநிறக் கண்ணனை, ஆயர் குலத்தவளான யசோதை தாலாட்டியதை வேத விற்பன்னர்கள் நிறைந்த ஸ்ரீ வில்லி புத்தூரில் வாழ்ந்த பட்டர் பிரான் கற்பனையில் கண்டு பாடியுள்ளார். இதை பக்தியோடு பாடுபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள் தொடராது. (ஆழ்வார் திருவடிகளே சரணம்) தாலாட்டு முற்றிற்று.

(“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை” திருமூலர்)

சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right