23.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-08-23 08:54:25

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி காலை 6.20. அதன் மேல் சஷ்டி திதி. பின்னிரவு 3.53 வரை பின்னர் ஸப்தமி திதி. திதி அவமாகம். அஸ்வினி நட்சத்திரம் மாலை 6.53 வரை.  பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) 

(இன்று மாலை 5.30 மணிக்கு “ரூபவாஹினி” தொலைக்காட்சியில் "நேத்ரா அலைவரிசை" யில் கடந்த 10.07.2016 ஞாயிறு தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் நடைபெற்ற புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் ஒளிபரப்பாகும்.) 

மேடம்: மகிழ்ச்சி, நிம்மதி

இடபம்: அமைதி, தெளிவு

மிதுனம்: முயற்சி, முன்னேற்றம்

கடகம்: புகழ், பெருமை

சிம்மம்: காரியசித்தி, அனுகூலம்

கன்னி: நலம், ஆரோக்கியம்

துலாம்: நஷ்டம், கவலை

விருச்சிகம்: மறதி, விரயம்

தனுசு: அச்சம், பகை 

மகரம்: சுகம், சௌக்கியம்

கும்பம்: தெளிவு, உறுதி

மீனம்:  பக்தி, ஆசி

பெரியாழ்வார் அருளிச் செய்த கண்ணன் தாலாட்டு பாசுரம் . "சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும் அங்கன் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கண் கருமுகிலே! தாலேலோ தேவகி சிங்கமே! தாலேலோ!  பொருளுரை; அனைத்து தேவர்களும் சங்கில் உயர்ந்ததான வலம்புரியையும் திருவடிகளுக்குச் சதங்கையையும் அழகிய முன்சரி வளையும் தங்க அரைஞான் கயிறும் திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர். சிவந்த திருக்கண்களையுடைய கருமேகம் போன்றவனே! தேவகி வயிற்றில் பிறந்த சிங்கமே உன்னை தாலாட்டுகிறேன்!

(பெரியாழ்வார் திருவடிகளே சரணம்)

புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9

பொருந்தா எண்கள்: 8,7

அதிர்ஷ்ட வர்ணங்கள்:மஞ்சல்,வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right