22.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-08-22 07:58:45

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி காலை 8.40 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. ரேவதி நட்சத்திரம் முன்னிரவு 8.29 வரை. அதன் மேல் அச்சுவினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரம், உத்திரம். சுபநேரங்கள் காலை 6.15– 7.15, 9.00– 10.30, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம்– கிழக்கு (பரிகாரம்–  தயிர்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் காலை 7.23 – 7.59 சுப முகூர்த்த நாள் ரேவதி நட்சத்திர  தினமான இன்று திருவோண நட்சத்திரத்திற்குரிய திருவரங்நாதரை வழிபடல் நன்று

மேடம்: வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம்: பிணி, பீடை

மிதுனம்: தடை, தாமதம்

கடகம்: நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம்: வரவு, லாபம்

கன்னி: பகை, விரோதம்

துலாம்: சுபம், மங்கலம்

விருச்சிகம்: அச்சம், பகை

தனுசு: அன்பு, இரக்கம் 

மகரம்: நட்பு, உதவி 

கும்பம்: அன்பு, ஆதரவு

மீனம்: லாபம், லஷ்மீகரம்

பெரியாழ்வார் அருளிய முதற்பத்து கண்ணன் தாலாட்டு பாசுரம் 3. "எந்தம் பிராணார் எழில் திருமார்வர்க்கு சந்தம் அழகிய தாமரை தாளார்க்கு இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ!  பொருளுரை; எந்தன் தலைவனும் அழகிய திருமார்பை உடையவனும் தாமரை மலர் போன்ற பாதங்களை கொண்டவனுமான உனக்கு, இந்திரன் அழகிய சதங்கையைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் நடுவில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றான். கருணையுடன் பார்க்கும் கமலக் கண்ணனே! உன்னைத் தாலாட்டுகின்றேன். 

(ஆழ்வார் திருவடிகளே சரணம்)

ராகு, குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9, 3

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right