21.08.2016 துர்­முகி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

2016-08-21 09:25:12

கிருஷ்ண பட்ச திரி­தியை திதி பகல் 10.53 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.00 மணி­வரை பின்னர் ரேவதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி அமிர்த யோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 6.15– 7.15, பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம் மேற்கு (பரி­காரம் –வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள் கிருஷ்­ண­பட்ச மஹா சங்­கட ஹர சதுர்த்தி விரதம். ஆவணி முதலாம் ஞாயிறு கண்­ணனை ஆரா­தித்தால் கஷ்­டங்கள் விலகும். தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் சகஸ்ர சங்­கா­பி­ஷேகம் உற்­சவம். அன்­ன­தானம்.

மேடம்: திறமை, முன்­னேற்றம்

இடபம்: நட்பு, உதவி

மிதுனம்: கீர்த்தி, புகழ்

கடகம்: மறதி, விரயம்

சிம்மம்: லாபம், லக்ஷ்­மீ­கரம்

கன்னி: திடம், நம்­பிக்கை

துலாம்: அமைதி, தெளிவு

விருச்­சிகம்: ஜெயம், புகழ்

தனுசு: அன்பு, கருணை

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: சிக்கல், சங்­கடம்

மீனம்: உண்மை, உதவி

பெரி­யாழ்வார் அரு­ளிய திருவாய் மொழி முதல் பத்து கண்ணன் தாலாட்டு பாசுரம். உடையார் கன மணி யோடு ஒண் மாது­ளம்பூ இடை­வி­ரக்­கோத்த எழில் தெய்­கி­னோடு விடை­யேறு கபாலி ஈசன் விரு­தந்தான் உடையாய்! அழேல் தாலேலோ. உலகம் அளந்­தானே! தலேலோ. பொரு­ளுரை; காளை வாக­னத்தில் ஏறிச் செல்லும் கபா­லீஸ்­வரர் உனது இடுப்­புக்குப் பொருத்­த­மான இடைச் சுரி­கையும் நடுவில் பொன்­ம­ணிகள் கோத்த மாது­ளம்பூ கோவை எனப்­படும். அரை வடத்­தையும் அனுப்பி உள்ளார். எல்லா உயிர்­க­ளையும் அடி­மை­யாக உள்­ள­வனே. அழ­கியை நிறுத்தி இவற்றை அணிந்து கொள். உல­கத்­தையே அளந்த நீ பாவ­னை­யாக கூட அழாதே! உன்னைத் தாலாட்­டு­கிறேன் (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

குரு சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right