19.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-08-19 08:05:21

கிருஷ்ணபட்ச பிரதமை திதி பிற்பகல் 2.34 வரை. அதன்மேல் துவிதியை திதி சதையம் நட்சத்திரம் பின்னிரவு 12.25 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திம். சிரார்த்த திதிகள் வளர்பிறை பிரதமை. துவிதியை திதித்துவம். சித்தியோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம். சுபநேரங்கள் காலை10.00 – 10.30, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம்  –  மேற்கு (பரிகாரம்  – வெல்லம்) சிராவண பகுள பிரதமை. சுபநாள். இன்று காயத்திரி மந்திர ஜெபம் நன்று

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: பகை, விரோதம்

மிதுனம்: கவலை, கஷ்டம்

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: தனம், சம்பத்து

கன்னி: பிணி, பீடை

துலாம்: உண்மை, உறுதி

விருச்சிகம்: சஞ்சலம், சங்கடம்

தனுசு: புகழ், பெருமை

மகரம்: செலவு, விரயம்

கும்பம்: பிரயாசை, நஷ்டம்

மீனம்: நிறைவு, பூர்த்தி

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் "மந்தக்கற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீ ரே, முகிழ் நகையீர்! வந்து காணீ ரே" பொருளுரை: யானைகளுடைய வசுதேவரது மனதில் குடி கொண்ட தேவகியின் கருவிலே அஸ்த நட்சத்திரத்துக்கும் பத்து நாட்கள் முன் அதாவது ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை “துவாரஹா” கிருஷ்ணனுடைய அழகான அமைப்பான ஆண் குறியை காட்டி ஆனந்திக்கிறாள் கோதை (முத்தம் – ஆண்குறி). ரோகிணியில் கண்ணன் அவதரித்ததை பெரியாழ்வார் அத்தத்தின் 10 ஆம் நாள் தோன்றிய அச்சுதன் என்று குறிப்பிடக் காரணம் ரோகிணியில் தோன்றியதை அறிந்தால் எங்கே கண்ணனை கம்சன் கொன்று விடுவனோ என்று அச்சப்படுகின்றார். ஜோதிடத்தில் உள்ளபடி ஜன்ம நட்சத்திரம், அனுஜென்ம நட்சத்திரம், திரிஜென்ம நட்சத்திரம் இவற்றை கம்சன் சரியாக கணக்கிட முடியாமல் குழம்பட்டும் என்றே அத்தத்தின் 10 ஆம் நாள் என்று குறிப்பிடுகின்றார். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right