14.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

2016-08-14 08:59:02

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி மாலை 4.37 வரை. அதன் மேல் துவா­தசி திதி. மூலம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.43 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஏகா­தசி அமிர்த கம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கார்த்­திகை, ரோகினி. சுப­நே­ரங்கள்: காலை 8.15 – 9.00. மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.30 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) இன்று ஸர்வ சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி விரதம். இதற்கு புத்­தி­ரதா ஏகா­தசி என்று பெயர். உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமான் நாரா­ய­ணனை வழி­ப­டு­வதால் புத்­திர சம்­பத்து ஏற்­படும்.

மேடம் : வரவு, லாபம்

இடபம் : தடை, தாமதம்

மிதுனம் : செலவு , விரயம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : லாபம் , லஷ்­மீ­கரம்

கன்னி : வெற்றி , ஜெயம்

துலாம் : நோய் , வருத்தம்

விருச்­சிகம் : நன்மை, யோகம்

தனுசு : திறமை, ஆர்வம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : உயர்வு, செல்­வாக்கு

பெரி­யாழ்வார் அரு­ளிய முதற்­பத்து இரண்டாம் திருவாய் மொழி கண்ணன் பிறந்தான். பாசுரம்; “ஒருவர் விழுவார் உகந்­தா­ளிப்பர் நாடுவார் நம்­பிரான் எங்­குத்தான் என்பார். பாடு­வார்­களும் பல்­பறை கொட்ட நின்று ஆடு­வார்­களும் ஆயிற்றாய்ப் பாடியே” பொரு­ளுரை: ஆயர்­பா­டியில் உள்ள யாத­வர்கள் தங்கள் தலை­வ­னான நந்த கோப­னுக்குப் பிள்ளைப் பிறந்­ததைக் கேட்­டதும் மகிழ்ச்­சியில் தம்மை மறந்து மற்­ற­வர்­க­ளுக்குச் சேதி சொல்ல நாலா புறமும் ஓடினர். சிலர் ஓடும் போதே விழுந்­தனர். விழும்­போது அவர்கள் உடம்­பெல்லாம் எண்­ணெயும் சுண்­ணமும் கலந்த சேறு அப்பிக் கொண்­டது.

புதன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1 – 5 – 9

பொருந்தா எண்கள் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் வெளிர், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right