12.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-08-12 09:22:45

சுக்கிலபட்ச நவமி திதி பகல் 02.06 வரை. அதன் மேல் தசமி திதி அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 8.08 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். அதிதி திதி சூன்யம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: காலை 9.15  –10.15. மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகை காலம் 7.30 – 9.00. வாரசூலம்– மேற்கு (பரிகாரம் – வெல்லம்)  இன்று வரலக் ஷ்மி விரதம். சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதமாகும். இவ்விரத மகிமை பரமசிவனால் பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது. இன்று மாலை தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு  இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். இன்று ஆடி வெள்ளி.

மேடம் : உண்மை, உயர்வு

இடபம் :  அசதி, வருத்தம்

மிதுனம் :  லாபம், லஷ்மிகரம்

கடகம் :  செலவு, விரயம் 

சிம்மம் :  சுகம், ஆரோக்கியம் 

கன்னி :  கவலை, நஷ்டம் 

துலாம் :  உயர்வு, மேன்மை 

விருச்சிகம் :  ஜெயம், புகழ் 

தனுசு :  நட்பு, உதவி 

மகரம் :  பொறுமை, லாபம்

கும்பம் :  கவனம், எச்சரிக்கை

மீனம் :  தனம், சம்பத்து

பெரியாழ்வார் திருவாய்மொழி. திருப்பல்லாண்டு “பல்லாண்டென்று பவித்திரனை பரமேட்டியைச் சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிப்புத்தூர் விஷ்ணு சித்தன் விரும்பிய சொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்தேத்துவார் பல்லாண்டே. பொருளுரை பரிசுத்தமாயிருக்கும் வைகுண்ட வாசனை சார்ங்கம் என்ற வில்லைத் தரித்திருப்பவனை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவதரித்த விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் பரிவுடன் பாடிய இத் திருப்பல்லாண்டை நல்ல காலம் வந்தவர்கள் தாம் பாடமுடியும் இடைவிடாமல் இதைப் பாடுபவர்கள் மறுமையில் முக்திபெற்று “துவாரகா” கண்ணை அங்கும் பல்லாண்டு பாடி பல்லாண்டு காலம் சுகித்திருப்பவர். திருப்பல்லாண்டு முற்றிற்று. நாளை பெரியாழ்வார் அருளிய முதற்பத்து இரண்டாம் திருமொழி “கண்ணன் பிறந்த வைபவம்” (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

குரு, சந்திரன் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள்:  1 – 5 – 7 – 3 

பொருந்தா எண்கள்: 6 – 9 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ்சள், இளஞ் சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right