25.07.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-07-25 17:46:38

கிருஷ்ண பட்ச சஷ்டி திதி முன்னிரவு 8.41 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் பகல் 1.52 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 6.15– 7.15, 9.15– 1-0.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம் -–தயிர்) கிருஷ்ண பட்ச சஷ்டி விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று.

மேடம்: தனம், சம்பத்து

இடபம்: பணம், பரிசு

மிதுனம்: நலம், ஆரோக்கியம்

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: வெற்றி, யோகம்

கன்னி: லாபம், லஷ்மீகரம்

துலாம்: சுபம், மங்களம்

விருச்சிகம்: அமைதி, தெளிவு

தனுசு: பாசம், அன்பு

மகரம்: கவனம், எச்சரிக்கை

கும்பம்: புகழ், பாராட்டு

மீனம்: ஆக்கம், நிறைவு

திருச்சந்த விருத்தம் பாசுரம் “பொன்னி சூழ் அரங்க மேய பூவை வண்ண! மாய கேள் உன்ன பாத மென்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே. பொருளுரை: காவிரியால் சூழப்பட்ட ஸ்ரீ ரங்கத்தில் சயனித்திருக்கும் காயாம்பூ மேனியுடைய மாயவனே! கேள். எனது ஆத்மாவாகிய பலமான பாவச் சேற்றுக்குள் உன்னைக் குறித்த பக்தி என்னும் விதை விழுந்து முளை எழும்பி உனது திருப்பாத கமலமாகின்ற அழகிய சுடர்மிக்க மலரிலே, நிலையாக வந்து படிந்து வாட்டமின்றி பரந்து செழித்து வளர்ந்திருக்கின்றது. (திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்)

(“துன்பம் என்று ஒன்று இருப்பதால்தான் சுகம் என்பதும் இருக்கின்றது”)

சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 2

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், வெளிர் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right