23.07.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 8 ஆம் நாள் சனிக்கிழமை

2016-07-25 17:42:52

கிருஷ்ணபட்ச சதுர்த்திதி பின்னிரவு 12.55 வரை. அதன்மேல் பஞ்சமி திதி சதயம் நட்சத்திரம் மாலை 4.10 பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. அமிர்தயோகம் மாலை 4.21 பின்னர் மரணயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம். சுபநேரங்கள் காலை 7.45 –  8.45, 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் –  கிழக்கு (பரிகாரம் –  தயிர்) சங்கட ஹர சதுர்த்திதி விரதம். விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபடுதல் நன்று. இன்று ஸ்ரீ சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள். கெருட  தரிசனம் நன்று

மேடம்: சுபம், மங்களம்

இடபம்: வெற்றி, காரியசித்தி

மிதுனம்: பிரிதி, சுகபோசனம்

கடகம்: அன்பு, ஆதரவு

சிம்மம்: புகழ், செல்வாக்கு

கன்னி: நலம், சௌக்கியம்

துலாம்: உழைப்பு, உயர்வு

விருச்சிகம்: விருத்தி, திரவிய லாபம்

தனுசு: நற்செயல், பாரட்டு

மகரம்: இன்பம், மகிழ்ச்சி

கும்பம்: திறமை, முன்னேற்றம்

மீனம்: குழப்பம், சஞ்சலம்

திருச்சந்த விருத்தம் பாசுரம் சுருக்குவாரையின்றியே சுங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரையின்றியே பெருக்கமெய்து ?????? செருக்குவார்கள் தீக்குளங்கள் தீர்த்த தேவ தேவனென்று  இருக்குவாய் முனிக்  கணங்கள் ஏத்தியானும் ஏத்தினேன். பொருளுரை உன்னை யாரும் சுருங்க வைக்காமல் வாமனனாய் சுருங்கினாய். உன்னை யாரும் விரிக்க வைக்காமல் திரிவிக்கிரமனாக பெருகி வளர்ந்தாய். பெருகவும் சுரங்கவும் செய்வது உனது ஆற்றல், மகாபரி கம்சன் இராவணன் போன்றவர்களின் தீய குணங்களை அழித்த தேவாதி தேவனே! இப்படி வேதங்கள் ரிஷிக்கள் துதிக்க நானும் துதிக்கின்றேன்.

(திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்)

(“பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறுப்பதும் மடமையின் முழு அடையாளம்)

புதன், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right