18.07.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 3 ஆம் நாள் திங்கட்கிழமை.

2016-07-18 08:46:00

சுபயோகம்

18.07.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 3 ஆம் நாள் திங்கட்கிழமை.

சுக்கில பட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 5.33 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. மூலம் நட்சத்திரம் மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, வார சூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்)

மேடம்: பக்தி, அனுக்கிரகம்

இடபம்: அமைதி, சாந்தம்

மிதுனம்ப: சிரமம்,சங்கடம்

கடகம்: அசதி, வருத்தம்

சிம்மம்: களிப்பு, கொண்டாட்டம்

கன்னி: நஷ்டம், கவலை

துலாம்: சோர்வு, வருத்தம்

விருச்சிகம்: வரவு, லாபம்

தனுசு: ஊக்கம், உயர்வு

மகரம்: பிரயாணம், அலைச்சல்

கும்பம்: கோபம், அவமானம்

மீனம்: புகழ், பாராட்டு

திருச்சந்தவிருத்தம் பாசுரம்: “பார்மிகுந்த பாரம் முன் ஒழிச்சுவான், அருச்சுனன் தேர் மிகுந்து மாய மாக்கி நின்று கொன்று வென்றி சேர்" பொருளுரை: பூமி பாரம் அதிகமாகித் தீயவர் பெருகினர். அவர்களை அழிக்க துவாரகா கிருஷ்ணனாக அவதரித்து அர்ச்சுனன் தேரை நன்றாக நடத்தினான். சூரியனைச் சக்கரத்தால் மறைத்து மாயம் செய்தான். தனக்கே வெற்றி என்று இறு மாந்திருந்த துரியோதனாதியருக்கு வீர சொர்க்கம் அளித்தான். பூமியை ஆளும் உரிமையைப் பாண்டவருக்கு அளித்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த உன்னையல்லால் இன்னொரு தெய்வத்தை நான் எங்ஙனம் எண்ணுவேன்? (திருமழிசை யாழ்வார் திருவடிகளே சரணம்)

(“கல்வி என்பது நமது அறியாமையை அறிந்து கொள்ளும் சாதனமாகும்”)

செவ்வாய், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 8

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right