12.07.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்கிழமை

2016-07-12 08:33:06

சுக்கிலபட்ச அஷ்டமி திதி முன்னிரவு 8.54 வரை. பின்னர் நவமி திதி. சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 5.27 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி. சித்தயோகம். சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூராட்டாதி. சுபநேரங்கள் காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் – வடக்கு  (பரிகாரம் – பால் ) துர்காஷ்டமி, திருவாழியாழ்வான் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. 

மேடம் : திறமை, ஆர்வம்

இடபம் : அசதி, வருத்தம் 

மிதுனம் : புகழ், பாராட்டு 

கடகம் : நட்பு,  உதவி 

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

கன்னி : அமைதி, நிம்மதி 

துலாம் : சோதனை, தேர்ச்சி 

விருச்சிகம் : லாபம், லஷ்மீகரம் 

தனுசு : நலம், ஆரோக்கியம் 

மகரம் : காரியசித்தி, அனுகூலம் 

கும்பம் : பணம், பரிசு 

மீனம் : அச்சம், பகை 

திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்தவிருத்தம் பாசுரம் ஊனின் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ. யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே! பொருளுரை: இராமனே! சரீரத்தில் உள்ள உயிர் நீ உறக்கமும் விழிப்பும் நீ! பசுக்களிடம் உண்டான பஞ்ச கவ்யமும் நீ! அதிலுள்ள தூய்மையும் நீ. ஆகாயமும் பூமியும் நீ வளமான சமுத்திரத்தில் உண்டான ரத்தினங்கள், கற்பக விருட்சம் காம தேனு உச்சைச் சிரவஸ் ஐராவதம் அமிருதம் அனைத்தும் நீதான். என்னுள்ளும் நீதான் இருந்து செயல்பட வைக்கின்றாய். நான் துதிக்கும் எம்பெருமானும் நீயே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

("நம் திறமைகளின் எல்லையைக் காணும் போது நாம் வாழ்க்கையில் முன்னேறுகின்றோம்")

குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 - 5

பொருந்தா எண்கள்: 6-- 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right