11.07.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-07-11 09:05:25

சுக்கில பட்ச ஸப்தமி திதி முன்னிரவு 7.05 வரை. பின்னர் அஷ்டமி திதி அஸ்தம் நட்சத்திரம் பின்னிரவு 2.58 வரை. அதன் மேல சித்திரை நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் சதயம். சுபநேரங்கள் காலை 6.15– 7.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்) சுபயோக சுபமுகூர்த்த நாள்.

மேடம்: ஓய்வு, அசதி

இடபம்: அமைதி, சாந்தம்

மிதுனம்: உழைப்பு, உயர்வு

கடகம்: உற்சாகம், மகிழ்ச்சி

சிம்மம்: பகை, விரோதம்

கன்னி: லாபம், லஷ்மீகரம்

துலாம்: ஜெயம், புகழ்

விருச்சிகம்: செலவு, விரயம்

தனுசு: தனம், சம்பத்து

மகரம்: சோர்வு, அசதி

கும்பம்: சுகம், ஆரோக்கியம்

மீனம்: காரியசித்தி, அனுகூலம்

திருமழிசை யாழ்வார் அருளிய திருச்சந்தவிருத்தம் பாசுரம் இலங்கையை ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன். இலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே! பொருளுரை பரிசுத்தமான பெருமானே நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் நான் பிறக்கவில்லை! நன்மையைக் கொடுக்கும் நான்கு வேதங்களையும் நான் படிக்கவில்லை. ஐந்து இந்திரியங்களையும் நான் அடக்கவில்லை. உனது ஒளிமிக்க திருப்பாத கமலங்களையன்றி கடைத்தேற வேறு ஒரு வழியும் தெரியவில்லை. (ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(பணிவான சொற்கள் கரடுமுரடான நம் வாழ்க்கைப் பாதையை எளிமையாக்குகின்றன)

சந்திரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெண்மை, நடுத்தர மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right