01.07.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-07-01 07:14:20

கிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.15 வரை. பின்னர் திரயோதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் முன்னிரவு 11.14 வரை. பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. சித்தயோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் காலை 9.45– 10.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகைகாலம் 7.30– 9.00, வார சூலம் மேற்கு (பரிகாரம் – வெல்லம்) கார்த்திகை விரதம். முருகப் பெருமானை வழிபடல் நன்று. கூர்ம ஜெயந்தி. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற் கடலை கடைய மந்தர மலையை திருமால் ஆமையாக அவதாரமெடுத்து நிலை நிறுத்திய அவதார திருநாள்.

மேடம்: நற்செய்தி, பரிசு

இடபம்: பணம், சன்மானம்

மிதுனம்: பாசம், அன்பு

கடகம்: செலவு, விரயம்

சிம்மம்: காரியசித்தி, அனுகூலம்

கன்னி: நலம், ஆரோக்கியம்

துலாம்: புகழ், பெருமை

விருச்சிகம்: வரவு, லாபம்

தனுசு: கோபம், அவமானம்

மகரம்: புகழ், சாதனை

கும்பம்: அமைதி, சாந்தம்

மீனம்: பிரிவு, கவலை

திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்தவிருத்தம் பாசுரம்: “காணிலும் உருப்பொயார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரந்தரமிடுக்கிலாத தேவரை” பொருளுரை: சில தேவதைகள் விகார உருவமுடையவராக இருப்பர். அவர்களது பெருமைகளும் கேட்க சகிக்காததாக இருக்கும். அவர்களை பூஜித்தாலும் விரும்பிய வரங்களைத் தருவதற்கு சக்தி இல்லாதவராக இருப்பர். அவர்களைச் சரணடைந்து வாழ்வில் இழிந்த நிலையை அடையும் அறிவிலிகளே! எல்லாவற்றிற்கும் ஆதி காரணனான எங்களின் ஆதி மூலத்தை வழிபட்டு உங்கள் சம்சாரமெனும் பெரும் புதரை அறுத்துக் கொள்ள மாட்டீர்களா? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“நன்றி கெட்டவர்களுக்கு நன்மை செய்வது கடலுக்குள் பன்னீர் ஊற்றுவதைப் போன்றது”)

சூரியன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right