29.06.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை

2016-06-29 09:11:53

கிருஷ்ணபட்ச நவமி திதி காலை 6.26 வரை. அதன் மேல் தசமி திதி பின்னிரவு 3.59 வரை. பின்னர் ஏகாதசி திதி அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 2.22 வரை. பின்னர் பரணி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை தசமி மரணயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம் வடக்கு (பரிகாரம்– பால்) திதி அவமாகம்.

மேடம்: வரவு, லாபம்

இடபம்: நோய், வருத்தம்

மிதுனம்: லாபம், லஷ்மீகரம்

கடகம்: ஈகை, புண்ணியம்

சிம்மம்: செலவு, நஷ்டம்

கன்னி: புகழ், சாதனை

துலாம்: கோபம், சினம்

விருச்சிகம்: குழப்பம், சஞ்சலம்

தனுசு: அசதி, நோய்

மகரம்: வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம்: புகழ், பாராட்டு

மீனம்: நன்மை, அதிர்ஷ்டம்

திருச்சந்தவிருத்தம் பாசுரம்: சோர்விலாத காதலால் தொடர்கலாத மனத்தராய் நீராவணை கிடந்த நிர்மலன் நலங்கழல். பொருளுரை– திருப்பாற் கடலில் ஆசிசேஷன் படுக்கையில் சயனித்துள்ள நிர்மலனுடைய நன்மையைத் தரும் பாத கமலங்களைப் பக்தியோடு துதித்து சோர்வடையாத அன்போடு தொடர்பு அறுபடாத உள்ளத்தோடு “ஓம் நமோ நாராயணாய” என்று காதலோடு சொல்பவர்கள் பரம பதத்தை அடைவார்கள் என்பது திண்ணம் (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

தெஹிவளை, நெடுமால் ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி தேவஸ்தானத்தில் 06.07.2016 புதன்கிழமை கும்பாபிஷேக கிரியாரம்பம்.

8, 9 திகதிகளில் எண்ணெய்காப்பு.

10.07.2016 ஞாயிற்றுக்கிழமை ஆனி உத்தரத்தில் புனராவர்தன மகா கும்பாபிஷேகம்

சந்திரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right