22.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 06ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

Published on 2015-12-22 15:54:07

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 9.53 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி பரணி நட்­சத்­திரம் மாலை 05.53 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி சித்­த­யோகம் கரிநாள் சுபம் விலக்­குக. கீழ் நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம் சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45. பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 3.00 – 4.30 எம­கண்டம் 9.00 – 10.30 குளி­கை­காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்)

மேடம் : தனம், லாபம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : லாபம், லஷ்­மீ­கரம்

கடகம் : பகை, எதிர்ப்பு

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : மேன்மை, செல்­வாக்கு

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : ஆசை, நட்பு

தனுசு : விரைவு, தடங்கல்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : சலனம், சஞ்­சலம்

அதி­காலை 6.00 மணிக்கு தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் துவா­தசி தீர்த்த வாரி உற்­சவம். திருப்­பாவை 06ம் நாள். (புள்ளும் சிலம்­பின்கான்) பற­வைகள் ஒலி எழுப்­பு­கின்­றன. கரு­ட­னுக்கு தலை­வ­னான திரு­மாலின் கோயிலில் வெண்­மை­யான சங்கு ஊதும் பெரும் ஓசை உனக்கு கேட்­க­வில்­லையா. பூதகி என்றும் பேய்­ம­களின் விஷப்­பாலை உண்டு வண்டி சக்கர வடிவில் கொல்ல வந்த மாய சக­டா­சு­ரனை நொறுக்கி மாய்க்­கத்தன் திரு­வ­டியைத் திருப்­பாற்­க­டலில் ஆதி­சேஷன் மேல் பள்ளி கொண்­டி­ருக்கும் அவ­தா­ரங்­களின் கார­ண­னான நாரா­ய­ணனை தன் உள்­ளத்தில் கொண்­ட­மு­னி­வர்­களும் யோகி­களும் ஹரி, ஹரி என்று உச்­ச­ரிக்கும் ஜப­சத்தம் நம் செவி­வ­ழி­யாக இத­யத்தில் நுழைந்து குளிர வைக்­கின்­றதை கேள்.

ராகு, சுக்­கிரன் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 6

பொருந்தா எண்கள்: 8– 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)