23.06.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 09 ஆம் நாள் வியாழக்கிழமை

2016-06-23 08:14:10

கிருஷ்ணபட்ச திரிதியை திதி மாலை 5.16 வரை. அதன்மேல் சதுர்ஸ்தி திதி. உத்திராடம் நட்சத்திரம் காலை 9.44 வரை.  பின்னர் திருவோண நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. சித்தயோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, பிற்பகல் 12.15 –  1.00 , ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் –தைலம்) திருவோணம் விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் மகாவிஷ்ணு, விநாயகர் வழிபாடு சிறப்புடையது.  

மேடம்: உயர்வு, மேன்மை

இடபம்: செலவு, விரயம்

மிதுனம்: போட்டி, ஜெயம்

கடகம்: நலம், ஆரோக்கியம்

சிம்மம்: வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி: மகிழ்ச்சி, சந்தோஷம்

துலாம்: அன்பு, ஆதரவு

விருச்சிகம்: நட்பு, உதவி

தனுசு: சுபம், மங்களம்

மகரம்: நிறைவு, பூர்த்தி

கும்பம்: நன்மை, அதிர்ஷ்டம்

மீனம்: திறமை, ஆர்வம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம்: சரங்களைத் துரந்து வில்வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்தனுத் துதிர்த்த அரங்கம் என்பர் நான் முகத்தயன் பணித்த கோயில். பொருளுரை: கோதண்டத்தை வளைத்து பாணங்கள் ஏவி இலங்கை மன்னான இராவணனின் பத்து சிரங்களையும் நிலத்தில் உதிர்த்த ஸ்ரீ ராமபிரான் உறைகின்ற இடம் எதுவென்றால், வென்னைக்கொழிக்கும் அலை வீசும் பொன்னி நதி பாயும் நான்கு முகங்களையுடைய பிரம்மன் வணங்கும் கோயிலான ஸ்ரீரங்கமே. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(" வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்")

புதன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right