22.06.2016 துர்முகி வருடம் ஆனி மாதம் 08 ஆம் நாள் புதன்கிழமை

2016-06-22 07:49:37

கிருஷ்ணபட்ச துவிதியை திதி மாலை 5.47 வரை. பின்னர் திரிதியை திதி. பூராடம் நட்சத்திரம் காலை 9.21 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை. அமிர்த யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 3.30 – 4.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்) 

மேடம்: தனம், சம்பத்து

இடபம்: உதவி, நட்பு

மிதுனம்: சுபம், மங்களம்

கடகம்: பயம், பகை

சிம்மம்: பணம், பரிசு

கன்னி: வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம்: ஏமாற்றம், கவலை

விருச்சிகம்: ஓய்வு, அசதி

தனுசு: நலம், ஆரோக்கியம்

மகரம்: அமைதி, தெளிவு

கும்பம்: சலனம், சஞ்சலம்

மீனம்: ஆக்கம், திறமை

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம்: “கடைந்த பாற்கடல் கிடந்து காலநேமியை க???? உடைந்த வாலிதன் தனக்கு உதவ வந்து இராமனாய் மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்மினோ!” பொருளுரை: அமிர்தம் பெற பாற்கடலை கடைந்து பெருமைப்படுத்த அதில் பள்ளிகொண்டான். காலநேமி என்ற அசுரனை அழித்தான். நடுங்கிக் கிடந்த சுக்கிரவனுக்கு உதவ இராமனாய் அவதரித்தான். நெருங்கி இருந்த ஏழு மராமரங்களையும் ஒரே பாணத்தால் வீழ்த்தினாய். திருவேங்கடவானனாக எழுந்தருளியுள்ளாய். உன் திருவடிகளை அன்போடு பணிபவர்களின் பிறவிப் பிணியை அகற்றுகின்றாய்! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு, வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right