21.06.2016 துர்­முகி வருடம் ஆனி மாதம் 07 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

2016-06-21 09:35:29

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி மாலை 5.48 வரை. அதன்மேல் துவி­தியை திதி. மூலம் நட்­சத்­திரம் காலை 8.30 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. அமிர்­த­சித்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள் காலை 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) ஜேஷ்ட பகு­னம் பிர­தமை

மேடம் : திறமை, முன்­னேற்றம்

இடபம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மிதுனம் : நட்பு, உதவி

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : சோர்வு, வருத்தம்

துலாம் : சலனம், சஞ்­சலம்

விருச்­சிகம் : லாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : அமைதி, நிம்­மதி

மீனம் : நலம், ஆரோக்­கியம்

திரு­ம­ழி­சை­யாழ்வார் அருளிச் செய்த "திருச்­சந்த விருத்தம்" பாசுரம்: நடந்த கால்கள் நொந்­த­னவோ? நகுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்­கவோ? விலங்­குமால் வரைச்­சுரம் காவி­ரிக்­கு­டந்­தையுள் கிடந்­த­வாறு எழுந்­தி­ருந்து பேசு கேசனே! பொரு­ளுரை: கேச­வனே! அன்று ஸ்ரீ இரா­மா­வ­தா­ரத்தில் அயோத்­தியில் இருந்து ஸ்ரீலங்கா வரை நடந்து வந்தாய் உன் கால்கள் வலிக்­கின்­ற­னவா? பூமியை மீட்க வரா­க­மா­ன­வனே! உன் திரு­மே­னியில் ஏற்­பட்ட அச­தியால் உனக்கு சுரம் ஏற்­பட்­டு­விட்­டதா? காவே­ரியின் கரை­யி­லுள்ள திரு குடந்­தை­யிலே சய­னித்­தி­ருப்­ப­வனே நீ எப்­போதும் இப்­படி படுத்­தி­ருப்­பதை காண என் மனம் சகிக்­க­வில்லை. உன் பக்தன் திரு­ம­ழி­சை­யாழ்வான் வந்­துள்ளேன். எனக்­கா­க­வா­வது ஒரு முறை எழுந்­தி­ருந்து என்­னோடு பேசு கேச­வனே. (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 3

பொருந்தா எண்கள்: 6, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right