13.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 31 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-06-13 07:30:47

சுக்கில பட்ச நவமி திதி நாள் முழுவதும் (திதிதிரிதியை பிருக்கு) உத்தரம் நட்சத்திரம் மாலை 5.12 வரை. பினனர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை நவமி. சித்தியோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி. சுப நேரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்)

மேடம்: போட்டி, ஜெ-யம்

இடபம்: அன்பு, ஆதரவு 

மிதுனம்: தோல்வி, கவலை

கடகம்: அமைதி, தெளிவு

சிம்மம்: களிப்பு, கொண்டாட்டம்

கன்னி: வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம்: நட்பு, உதவி

விருச்சிகம்: பகை, விரோதம்

தனுசு: கவலை, கஷ்டம்

மகரம்: நலம், ஆரோக்கியம்

கும்பம்: லாபம், லஷ்மீகரம்

மீனம்: நன்மை, யோகம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்” பாசுரம் 36. ஆடகத்த பூண்முலை அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் ஆடகக்கை மாதர் வாயமுதம் உண்டது என் கொலோ! பொருளுரை; பொன் நகையணிந்த யசோதையின் பாலையும் அருந்தினாய் உன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை திரவடிகளால் உதைத்து அழித்தவனே! வஞ்சனையாக உன்னைக் கொல்ல வந்த பேய்ச்சி பூதனை முலையில் விஷத்தை பூசிக் கொண்டு வந்தாள். அவள் பாலையும் உண்டு. அவள் உயிரையும் உண்டாய் பொன் கங்கணங்கள் அணிந்த கோபியரின் இதழ் அமுதத்தை அமுது செய்த துவாரகா கண்ணனே! இது என்ன விந்தை (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்”) 

ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right