07.06.2016 துர்முகி வருடம் வைகாசிமாதம் 25 ஆம் நாள் செவ்வாய்கிழமை

2016-06-07 07:21:25

சுக்கிலபட்ச திரிதியை திதி பின்னிரவு 4.34 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. திருவாதிரை  நட்சத்திரம் பகல் 11.56 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. மரணயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, மூலம். சுபநேரங்கள் காலை 7.30– 8.30, பகல் 10.30 –11.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 09.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் வடக்கு (பரிகாரம் -– பால்) 

மேடம்: சலனம்,  சஞ்சலம்

இடபம்: உயர்வு, மேன்மை

மிதுனம்: நிறைவு, பூர்த்தி 

கடகம்:  கோபம், அவமானம்

சிம்மம்: பகை, பயம்

கன்னி:  போட்டி, ஜெயம் 

துலாம்: பிரீதி, மகிழ்ச்சி

விருச்சிகம்: செலவு, பற்றாக்குறை

தனுசு:  சுபம், மங்களம்

மகரம்: முயற்சி, முன்னேற்றம்

கும்பம்: ஆக்கம், நிறைவு

மீனம்: சாதனை, புகழ்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த “திருச்சந்த விருத்தம்” பாசுரம் 30. வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ்கடல்களும் போனகமும் செய்து ஆலியை துயின்ற புண்டரீகனே!  கூகைப் புகத் தெறித்த கொற்றவில்லி அல்லையே? பொருளுரை: விண்ணுலகமும் பூலோகமும் மலைகளையும் கடல்களையும் உண்டு ஓர் ஆலிலையில் கண் வளர்ந்த துவாரகைக் கண்ணனே! தேன் நிறைந்த குளிர்ந்த வாசனையை உடைய துளசியை மாலையாக ஏற்றுக்கொண்டவனே! மந்தரையின் கூன் முதுகு உடலுக்குள் அடங்கும்படி மண் உருண்டையைக் குறிபார்த்து எறிந்த வெற்றி வில்லை உடையவன் நீ அல்லவா! ( ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(“ சொற்கள் தேனீக்களைப் போல அவைகளில் தேனும் உண்டு. கொட்டும் கொடுக்கும் உண்டு. ”)

கேது, ராகு  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 4, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right