05.06.2016 துர்­முகி வருடம் வைகாசி மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

2016-06-05 14:46:08

அமா­வாஸ்யை திதி காலை 9.15 வரை. பின்னர் பிர­தமை திதி ரோகிணி நட்­சத்­திரம் பகல் 1.41 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. சித்த யோகம் மேல்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம் சுப­நே­ரங்கள்: 10.30 –11.30, மாலை 3.30 – 4.30, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூ­லம்–­மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : பிணி, நோய்

இடபம் : களிப்பு, மகிழ்ச்சி

மிதுனம் : பரிவு, பாசம்

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : திடம், உறுதி

கன்னி : உதவி, நட்பு

துலாம் : சினம், பகை

விருச்­சிகம் : அச்சம், பகை

தனுசு : நிறைவு, பூர்த்தி

மகரம் : தோல்வி, கவலை

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : உற்­சாகம், வர­வேற்பு

“திருச்­சந்த விருத்தம்” பாசுரம் 28 படைத்த பாரி­டந்து அளந்­த­துண்­டு­மிழ்ந்து பௌவ நீர் படைக்­கலம் விடுத்த பல்­படைத் தடக்­கை­மா­யனே. பொரு­ளுரை – மாயங்கள் புரி­வதில் வல்­ல­வனே! அண்­டங்­க­ளுக்கு கார­ண­மான கடலைப் படைத்தாய்! அதன் பின் திருப்பாற் கடல் சென்று ஆதி­சே­ஷனைப் படுக்­கை­யாக்கி யோக நித்­திரை செய்தாய். பிறகு தேவர்­க­ளுக்கு அமுதம் கொடுக்க பாற்­க­டலைக் கடைந்த பெருமை பெற்றாய். நீ உமிழ்ந்த பூமியை வரா­கமாய் அவ­த­ரித்து கோரைப்­பற்­களால் குத்­தி­யெ­டுத்து வந்தாய். அதில் மூன்­றடி நிலம் மகா­ப­லி­யிடம் யாசித்து திரி­விக்­கி­ர­மனாய் முழு­வ­தையும் அளந்து கொண்டாய். இந்­த­மாயச் செய்­கையால் கோவித்து போரிட மாலி, சுமாலி இரு­வ­ரையும் யம­லோகம் அடைய ஆயு­தங்­களை ஏவினாய். அனேக திவ்ய ஆயு­தங்­க­ளை­யு­டைய வலி­மை­யான திருக்­க­ரங்­களை உடைய அற்­பு­த­மா­னவே! புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9,8,6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், இலேசான பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right