21.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 05ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

Published on 2015-12-22 15:54:46

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 11.56 வரை.(ஸ்ரீ வைகுண்ட ஏகா­தசி) பின்னர் துவா­தசி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் மாலை 05.19 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்த யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்ம நட்­சத்­தி­ரங்கள் உத்­தரம், அஸ்தம். சுப­நே­ரங்கள் காலை 6.15– 07.15, 9.15 –10.15 மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 7.30 – 9.00. எம­கண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00 வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்).

மேடம் : புகழ், பெருமை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : முயற்சி, முன்­னேற்றம்

கடகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் : தெளிவு, அமைதி

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : உதவி, நட்பு

மகரம் : விரக்தி, வெறுப்பு

கும்பம் : பிர­யாணம், அசதி

மீனம் : நற்­செயல், பாராட்டு

சகல விஷ்ணு ஆல­யங்­களில் அதி­காலை சொர்க்க வாசல் திறத்தல். திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. திருப்­பாவை ஓதுதல் மார்­கழி திருப்­பாவை ஐந்தாம் பாசுரம் (மாயனை மன்­று வட மதுரை மைந்­தனை) வட­ம­து­ரையில் பிறந்து சகடன் திரு­ணா­வர்தன் போன்­ற­வர்­களை மாய­லீ­லை­களால் அழித்­தவன். தூய்­மையும் விஸ்­தீ­ர­ணமும் உள்ள யமுனை நதிக்­க­ரையில் வளந்­த­வனை யாதவர் குலத்தில் பிறந்த ஆப­ரணம் போன்ற தீப­மா­ன­வனை, தான் பிறந்த தாயின் திரு வயிற்றை பெரு­மை­யாக பேச வைத்த தாமோ­த­ரனை, நாம் நீராடி பரி­சுத்­த­மாக வந்து தூய மலர்­களைக் கொண்டு அர்ச்­சித்து வணங்­கினால், வாயால் அவன் பாமாலை பாடி, மனத்­தினால் அவனைத் தியா­னித்தால் நாம் அறி­யாமல் செய்த குற்­றங்கள் நெருப்பில் இட்ட தூசி போல் பொசுங்கி விடும். ஆகவே அவன் திருப்­பெ­யர்­களைச் சொல்­லுவோம்.

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 3 – 5 – 9– 1

பொருந்தா எண்கள்: 6– 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், மஞ்சள், சிவப்பு.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)