01.06.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 19 ஆம் நாள் புதன்கிழமை

2016-06-01 07:34:21

கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி மாலை 6.32 வரை.  அதன்மேல் துவாதசி திதி. ரேவதி நட்சத்திரம் முன்னிரவு 7.42 வரை.  பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. மரண யோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் – வடக்கு (பரிகாரம் – பால் )இன்று கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். ரேவதி நட்சத்திரம். திருவோணத்திற்குரிய திருவரங்க நாதனை உபவாசமிருந்து வழிபடல் நன்று.

மேடம்: நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்: நட்பு, உதவி

மிதுனம்: நலம், ஆரோக்கியம்

கடகம்: நற்செயல், பாராட்டு

சிம்மம்: அமைதி, தெளிவு

கன்னி: சிக்கல், சங்கடம்

துலாம்: லாபம், லக் ஷ்மீகரம்

விருச்சிகம்: பாசம், அன்பு

தனுசு: சினம், பகை

மகரம்: விருத்தி, உயர்வு

கும்பம்: புகழ், பாராட்டு

மீனம்: வெற்றி, ஜெயம்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 24. “ கங்கை நீர் பயந்து பாத பங்கயத்து எம் அண்ணலே! அங்கை, ஆழி, சங்கு,  தண்டு, வில்லும் வாளும் ஏந்தினாய். மங்கை மண்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே! பொருளுரை: கங்கையை தோற்றுவிக்கும் தாமரைப் பாதங்களை உடையவனே! அழகிய திருக்கரங்களில் சுதர்ஸனம், சங்கு, கௌமோதகி, சாரங்கம், நாந்தகம் என்னும் பஞ்சாயுதங்களை தரித்திருப்பவனே. நரசிம்மமாய் தோன்றிய தேவாதி தேவனே! தேனுள்ள மென்மையான தாமரையில் பிறந்த திருமகள் பொருந்தியிருக்கும் திருமார்பை உடையவனே! கடல் நிறத் திருமேனியுடைய மாயவனே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“புகழ் அடைவதைக் கண்டு மகிழ்ச்சியடையாதே. தூற்றுவதைக் கண்டு துன்புறாதே”)

சூரியன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5, 6 

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், பொன்நிறம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right