25.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை

2016-05-25 09:10:14

கிருஷ்ணபட்ச திரிதியை திதி காலை 6.01 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி பூராடம் நட்சத்திரம். பின்னிரவு 1.33 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. சதுர்த்தி அமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை.  சுபநேரங்கள் காலை 9.00 – 10.00, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 09.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் –  பால்). இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகர் பெருமானை வழிபடல் நன்று.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: தோல்வி, கவலை

மிதுனம்: வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம்: உதவி, நட்பு

சிம்மம்: உயர்வு, மேன்மை

கன்னி:அமைதி, தெளிவு

துலாம்: காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம்: பொறுமை, நிதானம்

தனுசு: தேர்ச்சி, புகழ்

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: நட்பு, உதவி

மீனம்: நற்செயல், பாராட்டு

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம் 'பாசுரம் 17 ' "ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நாகமூர்த்தி சயனமாய் ஆகமூர்த்தி ஆயவண்ணம் என்கொல்? ஆதி தேவனே! " பொருளுரை: உலகங்களை உண்டு ஆலிலையில் துயின்ற போது ஒரே மூர்த்தியாக உள்ளாய். படைத்தல், காத்தல், அழித்தலை செய்யும் போது மூன்று மூர்த்தியாக பிரிந்திருக்கின்றாய். ஞானம், சக்தி, செல்வம், தேஜஸ் நான்கையும் உயிர்களுக்கு அளிக்க வேண்டி நான்கு மூர்த்தியாகின்றாய். தேவர்களுக்கு நன்மை அளிக்க யோக மூர்த்தியாக அவதரித்து ராசக்கீரிடை நடத்தினாய். இப்படி எண்ணற்ற மூர்த்தியாய் விளங்கும் அனந்த சயனனே! உன்னடியார்கள் ?????? அச்சாவதாரமாய் அவதரித்த தன்மை அற்புதம். ஆழ்வார் திருவடிகளே சரணம்

(“வாழ்க்கையில் எல்லோருக்கும் வளைந்து கொடுங்கள். ஆனால் உடைந்து போகாதீர்கள்”)

கேது, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5 

பொருந்தா எண்கள்: 7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right