19.12.2015 மன்­மத வருடம் மார்­கழி மாதம் 03ஆம் நாள் சனிக்­கி­ழமை.

Published on 2015-12-22 15:55:26

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி காலை 6.48 வரை. பின்னர் நவமி திதி பின்­னி­ரவு 4.28 வரை அதன் மேல் தசமி திதி. திதி அவ­மாகம். உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.31 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம் சிராத்த திதி வளர்­பிறை நவமி சித்­த­யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம் வியதி பாத சிரார்த்தம் பிரள்ய கல்­பாதி சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 9.00 – 10.30. எம­கண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30 வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்).

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : நலம், பெருமை

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : தெளிவு, அமைதி

துலாம் : நிறைவு, பூர்த்தி

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : வருத்தம், நோய்

மகரம் : நன்மை, யோகம்

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : மகிழ்ச்சி, சாந்தம்

மார்­கழி திருப்­பாவை மூன்றாம் நாள்,. ஓங்கி உல­க­ளந்த உத்­தமன் பேர்­பாடி தீங்­கின்றி நாடெல்லாம் திங்கள் மும்­மாரி பெய்து. விளக்கம்: வாமனனாய் திரி­விக்­கி­ர­மா­னாக ஓங்கி உய­ர­மாக வளர்ந்து மூன்று அடி­களால் உல­கங்­களை அளந்த உத்­த­ம­னான மகா விஷ்­ணுவின் நாமங்­களைப் பாடி பாவை நோன்­பிற்­காக நாம் நீரா­டினால் மாதம் மும்­மாரி பெய்து நாடெல்லாம் செழி க்கும். செந்நெல் பரந்து ஓங்கி வளரும். பயிர்­களில் மழை நீர் தேங்கி இருப்­ப தால் மீன்கள் துள்ளிக் குதிக்கும். பசுக்­க ளின் கொழுத்த பால் காம்­பு­களில் பால் கற க்க பசுக்கள் வள்­ளலைப் போல் குடம் நிறைய பால் தரும். இதனால் நாட்டில் தீய செயல்கள் விலகி கொடுங்­கோ­லாட்சி விலகும். நல்­லாட்சி விளங்க பாவை நோன்­பிற்­காக அழைக்­கிறோம்.

சூரியன் குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: ஏனை­யவை

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா