21.05.2016 துர்முகி வருடம் வைகாசி மாதம் 8 ஆம் நாள் சனிக்கிழமை

2016-05-22 09:04:01

பௌர்ணமிதிதி பின்னிரவு 3.11 வரை. அதன் மேல் பிரதமை திதி. விசாகம் நட்சத்திரம் முன்னிரவு 7.40 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்ததிதி பௌர்ணமி சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: காலை 7.30 – 8.30, பகல் 10.30  – 11.30, மாலை 4.30 – 5.30,  ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00,  குளிகைகாலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு  (பரிகாரம் – தயிர் ) புத்த பூர்ணிமா. சகல விஷ்ணு ஆலயங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம்.

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: போட்டி, ஜெயம்

மிதுனம்: மகிழ்ச்சி, சந்தோஷம்

கடகம்: அன்பு, இரக்கம்

சிம்மம்: இன்பம், சுகம்

கன்னி: அன்பு, ஆதரவு

துலாம்: ஆரோக்கியம், சௌக்கியம்

விருச்சிகம்: புகழ், பெருமை 

தனுசு: அமைதி, தெளிவு

மகரம்:  விவேகம், வெற்றி

கும்பம்: அச்சம், பகை 

மீனம்: சினம், பகை

இன்று வைகாசி விசாகம். நம்மாழ்வார் அவதாரத் திருநாள். பாடிய திவ்யபிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி திருவிருத்த பாசுரம் "பொய் நின்ற ஞானமும் பொல்ல ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாயப் பிறந்தாய்! இமை யோர் தலைவா! மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே. பொருளுரை: உலக உயிர்களைக் காக்க மீனாய், ஆமையாய், வராகமாய் அவதரித்தவனே தேவர்களின் தலைவனே! பொய்யான அறிவும், தீய நடத்தையும் அழுக்கான தேகமும் கொண்டு பிறவியில் அழுந்தியுள்ளேன். இனியும் நான் பிறவி அடையாத படி உன்னைப் பிரார்த்திப்பதைக் கேட்டருள வேண்டும். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

(“உன் இதயத்தில் நேர்மை இருந்தால் முகத்தில் அழகு புலனாகும்.”)

குரு, சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  5, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right