19.05.2016 துர்­முகி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2016-05-19 20:55:47

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி இரவு 11.30 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. சித்­திரை நட்­சத்­திரம் பகல் 2.44 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. திர­யோ­தசி. சித்­தா­மிர்த யோகம். சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள்: காலை 10.30 – 11.30, பிற்­பகல் 12.30 – 1.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) பிர­தோஷ விரதம். சிவ­வ­ழி­பாடு உகந்­தது. வளர்­பிறை சுப­மு­கூர்த்தம்.

மேடம் : புகழ், வெற்றி

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : புகழ், பாராட்டு

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : பிரீதி, மகிழ்ச்சி

கன்னி : நட்பு, உதவி

துலாம் : பாசம், அன்பு

விருச்­சிகம் : சினம், பகை

தனுசு : புகழ், சாதனை

மகரம் : தெளிவு, அமைதி

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

திரு­ம­ழி­சை­யாழ்வார் அரு­ளிச்­செய்த "திருச்­சந்த விருத்தம்" பாசுரம் 13. "இன்னை என்று சொல்­ல­லா­வது இல்லை; யாதும் இட்­டிடைப் பின்ன கேள்வன் என்பர். நின்னை யார் நினைக்க வல்லர் நீர்­மையால் நினைக்­கிலே?" பொரு­ளுரை: பரந்­தாமா! உன்னை இப்­ப­டிப்­பட்­ட­வ­னென்று யாரால் சொல்ல முடியும்? உனது அவ­தா­ரங்­களில் உன்மேல் பக்­தி­யு­டை­ய­வர்­களும் உன்­னிடம் ஐக்­கி­ய­மா­ன­வர்­களும் விவாதம் செய்­வதைக் கண்ட பாவ­லர்கள் நுண்­ணிய இடை­யு­டைய நீளா­தே­வி­யான நப்­பின்­னைக்கு கண­வ­னென்று சொல்­கின்­றனர். உனது திவ்ய மங்­கள வடி­வத்­தையும் திரு­நா­மங்­க­ளையும் திருத்­த­லங்­க­ளையும் அவ­தார இரக­சி­யங்­க­ளையும் உன்­னருள் இருந்தால் நீ சொல்லி அறிந்து கொள்­ள­லாமே தவிர மற்­ற­படி முழு­மை­யாக அறியும் சக்தி எவ­ருக்­குண்டு?

(ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“அழு­கி­றவன் அழுது முடிக்கும் முன் அவ­னுக்கு ஆறுதல் சொல்­லாதே”)

சூரியன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் : 1, 6

பொருந்தா எண்கள் : 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right