18.05.2016 துர்முகி வருடம், வைகாசி மாதம் 5 ஆம் நாள் புதன்கிழமை

2016-05-18 09:20:12

சுக்கிலபட்ச துவாதசி திதி முன்னிரவு 9.31 வரை. பின்னர் திரயோதசி திதி அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.11 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை, துவாதசி. மரணயோகம், சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.30 – 11.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் – பால்)

மேடம்: தடை, தாமதம்

இடபம்: கீர்த்தி, புகழ்

மிதுனம்: அன்பு, ஆதரவு

கடகம்: இன்பம், மகிழ்ச்சி

சிம்மம்: வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி: துணிவு, துணை

துலாம்: நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம்: உயர்வு, மேன்மை

தனுசு: தெளிவு, நிம்மதி

மகரம்: ஜெயம், புகழ்

கும்பம்: கவலை, கஷ்டம்

மீனம்: வரவு, லாபம்

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த "திருச்சந்த விருத்தம்" பாசுரம் 12. "உலகு தன்னை நீ படைத்தி உள்ளொடுக்கி வைத்தி மீண்டும் உலகு தன்னுள்ளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் உலகில் நின்னையுள்ள சூழல் யாவருள்ள வல்லரே?" பொருளுரை: பெருமானே உலகைப் படைத்தவன் நீ. உன் திருவயிற்றில் அதை அடக்கி வைத்து மீண்டும் உமிழ்ந்த உலகத்தில் நீ அவதரிக்கின்றாய். ஓரிடத்தில் நிலைத்து நின்கின்றாய் இல்லை. உலகில் நீயே தெய்வம். அதனால் உலகம் உன்னுள் ஒடுங்குகின்றது. அப்படிப்பட்ட நீ (இராமனாக கண்ணனாக) சரீரம் எடுத்து வருகின்றாய். ஆக ஒரு வகையிலும் ஒருவராலும் உன்னை நிர்ணயிக்க முடியவில்லை. ஆச்சரியமான உனது தன்மைகளை நினைக்க எவருக்கு ஆற்றல் உண்டு. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“ஒருவருக்கு நோக்கம் அவசியம்” நதியின் நோக்கம் கடல். அதனால் தான் அது எல்லாவற்றையும் தாண்டுகின்றது”)

செவ்வாய், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right