இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.07.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-07-28 07:28:35

28.07.2020 சார்­வரி வருடம் ஆடி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்கி­ழமை

சுக்கில பட்ச  அஷ்தமி  திதி பகல் 07.25 வரை.  அதன் மேல் நவமி திதி பின்னிரவு 5.07 வரை. பின்னர் தசமி திதி.  சுவாதி நட்­சத்­தி­ரம் பகல் 12.30 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிரை நவமி. சித்தயோகம் 12.30 வரை. பின்னர் மதன யோகம். சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : ரேவதி, அஸ்வினி

சுபநேரங்கள் காலை 07.45 - 08.45 வரை, மாலை 04.30 - 05.00 வரை. ராகுகாலம் 03.00 - 04.30 வரை. எமகண்டம் 09.00 - 10.30 வரை. குளிகை காலம் 12.00 - 01.30மணி வரை. வார­சூலம் - வடக்கு, பரிகாரம் - பால்

மேடம் – நன்மை,அதிஷ்டம்

இடபம் – பகை, விரோதம்

மிதுனம் – அன்பு, பாசம்

கடகம் – சிக்கல், சங்கடம்

சிம்மம் – அன்பு, ஆதரவு

கன்னி – தோல்வி, கவலை

துலாம் – நோய், வருத்தம்.

விருச்­சிகம் – லாபம், லஷ்மிகரம்

தனுசு – செலவு, விரயம்

மகரம் – சுபம், ஆரோக்கியம்

கும்பம் – கவலை, கஷ்டம்

மீனம் – வெற்றி, அதிஷ்டம்

கருட ஜெயந்தி. சேரமான் பெருமான், சுந்தர மூரு்த்தி நாயனார் பூஜை தினம். சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். இவர் ஆடித்திங்கள் சுவாதி நாளில் அரனடி சேர்ந்தார். இவரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாக  தொகுக்கப்பட்டுள்ளன.  இறைவன் தடுத்தாட்கொண்ட போது,  "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்

சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிஷ்ட எண்கள்         -  1, 5, 2

பொருந்தாத எண்கள்  -  8

அதிஷ்ட வர்ணங்கள்  - மஞசள், ஊதா

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right