12.05.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாள் வியாழக்கிழமை

2016-05-12 09:15:32

சுக்கில பட்ச சஷ்டி திதி மாலை 3.52. அதன் மேல் ஸப்தமிதிதி பூசம் நட்சத்திரம் பின்னிரவு 3.56. அதன் மேல் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி. அமிர்த சித்தயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.00,  ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் –  தெற்கு (பரிகாரம்– தைலம்). இன்று சுக்கலபட்ச சஷ்டி விரதம் வளர்பிறை கூபமூகூர்த்தம் கங்காஸப்தமி. இன்று பூசம் –  வியாழன் குருபகவானை வழிபடல் நன்று. 

மேடம்: முயற்சி, விருத்தம்

இடபம்: நன்மை, லாபம்

மிதுனம்: பக்தி, அதிகாரம்

கடகம்: ஆரோக்கியம், அனுகூலம்

சிம்மம்: கோபம், பகை

கன்னி: சிக்கல், சங்கடம்

துலாம்: பணிவு, பாசம்

விருச்சிகம்: நலம், நன்மை

தனுசு: நட்பு, போசனசுகம்

மகரம்: கவலை, துக்கம்

கும்பம்: தெளிவு, யோகம்

மீனம்: உற்சாகம், பிரியம் 

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த "திருச்சந்த விருத்தம்" திவ்ய பிரபந்தம் பாசுரம் ஆறு "நாக மேந்து மேரு வெற்பை நாகமேந்து மண்ணினை ஏக மேந்தி நின்ற நீர்மை நின் கணே இயன்றதே" பொருளுரை: ஆதி சேடனால் தாங்கப்படும் திருமேனியை உடையவனே! மேரு பர்வதம் சொர்க்கத்தை தாங்கியுள்ளது. ஆதி சேடன் அஷ்டதிக்கஜங்கள் தாங்கியுள்ள பூமியையும் வைகுண்டம், ஆகாயம் தாங்கிக் கொண்டுள்ள கங்கை மேக மண்டலம் வைச்வா நராக்கினி, பஞ்ச பிராணங்கள் இவை எல்லாவற்றையும் நீ ஒருவனே அடக்கியுள்ளதாக உபநிடதங்கள் சொல்லுகின்றன. உன்னால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று எவரால் புரிந்துகொள்ள முடியும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“பசித்த ஒருவனுக்கு  இன்று நீ சோறு போடலாம். ஆனால் நாளைக்கும் அவனுக்கு பசிக்கும் என்பதை மறந்துவிடாதே”)

குரு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right