12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24.04.2020 )..!

2020-04-24 07:34:50

24.04.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 11 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி பகல் 10.21 வரை, அதன்மேல் துவி­தியை திதி, பரணி நட்­சத்­திரம் மாலை 6.42 வரை, பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம், சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை, சித்­த­யோகம், கீழ்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி, சுப­நே­ரங்கள் 9.30 – 10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் மேற்கு, பரி­காரம் வெல்லம்.

மேடம் – மேன்மை, ஆதாயம்

இடபம் – செலவு, நஷ்டம்

மிதுனம் – மகிழ்ச்சி, இன்பம்

கடகம் – வரவு, தனம்

சிம்மம் – சாந்தம், தெளிவு

கன்னி – அதி­ருப்தி, தடை

துலாம் – அசதி, உபாதை

விருச்­சிகம் – போட்டி, ‍ஜெயம்

தனுசு – பயணம், அலைச்சல்

மகரம் – காரி­ய­சித்தி, வெற்றி

கும்பம் – சிக்கல், சங்­கடம்

மீனம் – சித்தி, அனு­கூலம்

இன்று சிறுத்­தொண்டர் நாயனார் குரு­பூசை. சோழ­நாட்டில் திருச்­செங்­காட்டில் குடியில் பிறந்­தவர். பரஞ்­சோ­தியார் என்னும் இயற்பெய­ரினர். வெண்­காட்டு நங்­கையை மணந்து சீரா­ளனை மக­னாக பெற்ற மாண்பினர். திரு­ஞா­ன­சம்­பந்­தரால் புகழ்ந்து பாடப்­பட்­டவர். சிவ­பி­ரா­னுக்­காக தனது ஒரே மகனை அரிந்து கறி சமைத்து அன்னம் பாலித்த மாண்பினர்.

சுக்­கிரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண் – 9

பொருந்தா எண் – 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள் – பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right