12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.03.2020 )..!

2020-03-18 09:25:20

18.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் பங்­குனி மாதம் 05ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச நவமி திதி காலை 8.29 வரை. அதன்மேல் தசமி திதி. பூராடம் நட்­சத்­திரம் மாலை 5.22 வரை. பின்னர் உத்­த­ராடம் . சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. அமிர்­த­யோகம் கீழ்­நோக்­குநாள்.  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்:  ரோகினி, மிரு­க­சீ­ரிடம்.  சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30 மாலை 4.30–5.30, ராகு­காலம் 12.00–1.30, எம­கண்டம் 7.30–9.00, குளி­கை­காலம் 10.30–12.00. வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) 

மேடம் : பகை, எதிர்ப்பு

இடபம்         : போட்டி, ஜெயம்

மிதுனம்         : விவேகம், வெற்றி

கடகம் : பகை, அச்சம்

சிம்மம் : பிணி, பீடை

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : அன்பு, பாசம்

கும்பம்        : அமைதி, தெளிவு

மீனம் : நலம், ஆரோக்­கியம்

இன்று பூராடம் நட்­சத்­திரம் பஞ்ச பூத தத்­து­வத்தில் ஜல­ராசிக் கட­வு­ளான வருணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். திரு­வா­னைக்கா இறைவன் ஜம்­பு­கேஸ்­வரர் சிவ­னையும் தாயார் அகி­லாண்­டேஸ்­வரி அம்­பி­கை­யையும் இன்று வழி­படல் சிறப்­பாகும். தெஹி­வளை ஸ்ரீவிஷ்ணு ஆல­யத்தில் தந்­வந்தி பக­வா­னுக்கு விஷேட சகஸ்ர நாம அர்ச்­சனை.

 (“விரோ­தி­க­ளுக்கு அன்­பைக்­காட்டு அது அவர்­களைப் பைத்­தி­ய­மாக்­கி­விடும்’’ – இயேசு­நாதர்)

செவ்வாய், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3 , 5

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right