12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.03.2020 )..!

2020-03-10 08:53:03

10.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி­மாதம் 27ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 9.43 வரை. அதன்மேல் துவி­தியை திதி. உத்­தரம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.22 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை  பிர­தமை. அமிர்த சித்தயோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அவிட்டம் சதயம். சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45, மாலை 4.30–5.30 ராகு­காலம் 3.00–4.30, எம­கண்டம் 9.00–10.30, குளி­கை­காலம் 12.00–1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) பால்­குண பதலி பிர­தமை.

மேடம் : துணிவு, வெற்றி

இடபம் : மனத்­தெ­ளிவு, வெற்றி

மிதுனம்         : திறமை, முன்­னேற்றம்

கடகம் : பாராட்டு, ஆசி

சிம்மம் : முயற்சி, மனோ­திடம்

கன்னி : நட்பு, ஆத­ரவு

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : காரி­ய­சித்தி, மன­நி­றைவு

தனுசு : அசதி, சோம்பல்

மகரம் : சுகம், இன்பம்

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : வாழ்வு, வளம்

தொண்­ட­ரடி பொடி­யாழ்வார் அரு­ளிய 'திரு­மாலை' பாசுரம் 27. 'குரங்­குகள் மலையைத் தூக்க குனிந்து தாம் புரண்­டோடு தரங்க நீர­டைக்­க­லுற்ற சல­மிலா அணிலும் போலேன்' பொரு­ளுரை –'சேது­பந்­தனம்' ஸ்ரீராமர் கடலைக் கடந்து இலங்கை வர குரங்­குகள் பெரிய கற்­களை கொண்டு பாலம் போடு­கின்­றன. அவ்­வி­டத்தில் கப­ட­மற்ற அணில்கள் கூறு­கின்­றன 'இந்த குரங்­கு­க­ளுக்கு கட்­டி­டக்­கலை தெரி­யாது போலும் கற்­களை ஒன்­றன்மேல் ஒன்று அடுக்­கினால் கட்­டிடம் ஆகுமா கற்­க­ளுக்­கி­டையில் சாந்­து­போட வேண்­டு­மல்­லவா என்று கூறி கடலில் குனிந்து மணலில் புரண்டு கடல் மணலை கற்­க­ளுக்­கி­டையில் தூர்க்­கின்­றன. ஸ்ரீராமன் நெகிழ்ந்து இந்த அணில்­க­ளுக்கு நான் என்ன கைமாறு செய்வேன். இராம சேவை எவ்­வ­ளவு போற்றி மதிக்­கின்­றன என்று கூறி தனது வலது கை நடு­வி­ரல்­களால் அணிலின் முதுகை தட­வு­கின்றான். இன்றும் அணிலின் முதுகில் காணப்­படும் மூன்று கோடு­களும் ஸ்ரீராமர் விரல் அடை­யா­ளங்­களே. சூரியன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று 

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5

பொருந்தா எண்கள் – 8, 7 

அதிர்ஷ்ட வர்ணங்கள் - மஞ்சள் வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right