12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.03.2020 )..!

2020-03-06 08:50:31

06.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 23 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி காலை 7.44 வரை. அதன்மேல் துவா­தசி திதி பின்­னி­ரவு 6.14 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. புனர்­பூசம் காலை 6.52 வரை. அதன்மேல் பூசம் நட்­சத்­திரம் மறுநாள் காலை 6.03 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவா­தசி. சித்­த­யோகம் காலை 6.05 வரை. பின்னர் மர­ண­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மூலம். சுப­நே­ரங்கள்: காலை 9.00–10.00. மாலை 4.30–5.30. ராகு­காலம் 10.30–12.00. எம­கண்டம் 3.00–4.30. குளி­கை­காலம் 7.30–9.00. சுப­மு­கூர்த்த தினம். திதி, நட்­சத்­திர அவ­மாகம்.

மேடம் : உயர்வு, நட்பு

இடபம் : பணிவு, செல்­வாக்கு

மிதுனம் : ஆசை, வீண்­செ­லவு

கடகம் : பணம், பரிசு

சிம்மம் : செலவு, பற்­றாக்­குறை

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் :முன்­னேற்றம், ஆர்வம்

விருச்­சிகம் : முயற்சி, அனு­கூலம்

தனுசு : துணிவு, காரி­ய­சித்தி

மகரம் : பக்தி, வழி­பாடு

கும்பம் : தடை, குழப்பம்

மீனம் : ஜெயம், வெற்றி

இன்று சுக்­கி­ல­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். வைஷ்­ணவ ஏகா­தசி ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. தொண்­ட­ர­டிப்­பொ­டி­யாழ்வார் அரு­ளிய “திரு­மாலை” நமனும் முத்­க­லனும் பேச, நகரில் நின்­றார்கள் கேட்க நர­கமே சுவர்க்­க­மாகும். நாமங்­க­ளு­டையன் நம்பி” முத்­கலன் என்­கின்ற கொடும்­பாவி மரிக்க, அவனை எம­தூ­தர்கள் நர­கத்தில் எம­னிடம் கொண்டு சென்று நிறுத்த எமன் முத்­க­லனை நோக்கி ஒரு நாளா­கிலும் நாரா­யண நாமத்தை உச்­ச­ரித்து இருந்தால் நீ நரகம் வந்­தி­ருக்கமாட்டாய் என்று நாரா­யண நாம மகி­மையைக் கூறு­கின்றான். உள்ளே நர­கத்தில் வேதனை அனு­ப­விப்­ப­வர்கள் காதில் எமன் பேசி­யது விழ, எமன் நர­கத்தை நோக்க நர­கமே சொர்க்­க­மாக மாறு­கின்­றது. கேட்­டது இவ்­வ­ளவு புண்­ணியம் என்றால் சொன்னால் எவ்­வ­ளவு புண்­ணியம் (தொடரும்).

(“முட்­டாள்­க­ளோடு சண்டை போடாதே. பார்க்­கி­ற­வர்­க­ளுக்கு யார் முட்டாள் எனத் தெரி­யாது”)

சுக்­கிரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6–1

பொருந்தா எண்கள்: 3–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right