12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.03.2020 )..!

2020-03-04 08:40:14

04.03.2020 ஸ்ரீவி­காரி வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச நவ­மி­திதி காலை 9.28 வரை. அதன்மேல் தசமி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் காலை 7.15 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. சித்­த­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம். சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 ராகு­காலம் 12.00–1.30 எம­ கண்டம் 7.30–9.00 குளி­கை­காலம் 10.30–12.00. வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) நாளை வாஸ்­துநாள் வாஸ்து நேரம் பகல் 10.06–10.42.

மேடம் : அச்சம், பகை

இடபம்            : அசதி, சோர்வு

மிதுனம்         : பயம், மனக்­கு­ழப்பம்

கடகம் : பக்தி, கோபு­ர­த­ரி­சனம்

சிம்மம் : களிப்பு, கொண்­டாட்டம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : காரி­ய­சித்தி, மன­நிம்­மதி

விருச்­சிகம் : அதிர்ஷ்டம், வெற்றி

தனுசு : நற்­செய்தி, மகிழ்ச்சி

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம்         : விரயம், செலவு

மீனம் : லாபம், லக் ஷ்மீகரம்

நாளை குல­சே­க­ராழ்வார் திரு­நட்­சத்­திரம். நான்காம் திரு­மொழி “மின்­னைய நுண்­ணி­டையார் உருப்­ப­சியும் மேன­கையும் அன்­னவர் தம் பாட­லொடும் ஆடலை ஆத­ரியேன் தென்ன என வண்­டி­னங்கள் பண்­பாடும் வேங்­க­டத்துள் அன்­ன­னை பொற்குவடாம் அருந்­த­வத்­த­னா­வேனே” மின்னல் போன்ற நுண்­ணிய இடை­யை­யு­டைய ஊர்­வ­சியும் மேன­கையும் போல் தேவ­நங்­கையர் ஆடலும் பாடலும் நான் விரும்­ப­வில்லை. அவை நடக்கும் இந்­திரன் சபையில் வீற்­றி­ருக்க நான் விரும்­ப­வில்லை. வண்­டுகள் கூட்டம் ரீங்­க­ரிக்கும் திரு­வேங்­க­ட­ம­லையில் வீற்­றி­ருப்­ப­தையே வேண்­டு­கிறேன். ராகு, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right