16.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 30ஆம் நாள் புதன் கிழமை.

Published on 2015-12-22 15:56:32

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பிற்பகல் 1.01 வரை. அதன் மேல் சஷ்டி திதி. அவிட்டம் நட்சத்திரம். பின்னிரவு 12.59 வரை. அதன் மேல் சதயம் நட்சத்திரம். சிரார்த்ததிதி வளர்பிறை சஷ்டி மரணயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்தரட்டாதி சுபநேரங்கள் காலை 9.15 – 10.15 பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00 குளிகை காலம் 10.30 – 12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : குழப்பம், சஞ்சலம்

இடபம் : நற்செயல், பாராட்டு

மிதுனம் : ஏமாற்றம், கவலை

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : சினம், பகை

துலாம் : மறதி, விரயம்

விருச்சிகம் : ஓய்வு, அசதி

தனுசு : துயரம், கவலை

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : சுகம், ஆரோக்கியம்

மீனம் : இன்பம், சுகம்

நாளை மார்கழி மாதம், மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கண்ணன் கீதையில் கூறியதற்கமைய இம்மாதத்தில் சகல விஷ்ணு ஆலயங்களிலும் நாளை முதல் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஓதும் வைபவம். இதனை முன்னிட்டு தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி தேவஸ்தானத்தில் அதிகாலை தனுர் மாத பூஜை ஆரம்பம். பாவை நோன்பு திருப்பாவை ஓதும் வைபவம் முதலியன இடம்பெறும். இன்று சந்திர தரிசனம் நன்று.

(“இடையறாத பிரார்த்தனைகள் இறைவன் காதில் தவறாது விழும்”)

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் : 5 – 6

பொருந்தா எண்கள் : 7 – 8 – 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)