12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.02.2020 )..!

2020-02-04 08:22:41

04.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் தை மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 

சுக்­கில பட்ச தசமி திதி மாலை 6.46 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. ரோகிணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.11 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. அமிர்­த­சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30 ராகு­காலம் 3.00–4.30 எம­கண்டம் 9.00–10.30 குளிகை காலம் 12.00–1.30. வார­சூலம்–வடக்கு (பரி­காரம் –பால்) ரோகிணி நட்­சத்­திர தின­மான இன்று கண்ணனை வழிபடல் நன்று.

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நலம், ஆரோக்கியம்

மிதுனம் : வாழ்வு, வளம்

கடகம் : அமைதி, தெளிவு

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : லாபம், ஆதாயம்

துலாம் : லாபம், லக் ஷ்மீகரம்

விருச்சிகம் : ஜெயம், வெற்றி

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : அன்பு, ஆதரவு

கும்பம் : தனம், சம்பத்து

மீனம் : உற்சாகம், மகிழ்ச்சி

திரு­ம­ழிசை ஆழ்வார் திரு­நட்­சத்­திரம் தை 27. அவ­த­ரிக்­கும்­போது வெறும் பிண்­ட­மாக அவ­த­ரித்­தவர். மான் வயிற்றில் ரிஷி சிங்­கரும், முயல் வயிற்றில் கெள­த­மரும், புற்­றி­லி­ருந்து வால்­மீ­கியும், மண்­கு­டத்தில் வசிட்­டரும் அவ­த­ரித்­தது போல் பார்­கவ முனி­வ­ருக்கும் அவர் மனைவி கன­காஸ்­திற்கும் தவப்­ப­யனாய் திரு­மாலின் சுதர்­ஸன சக்­க­ரத்தின் அம்­சமாய் அவ­த­ரித்­தவர் திரு­ம­ழி­சை­யாழ்வார். பரம பதத்­தி­லி­ருந்து பிராட்டி மகாலக் ஷ்மி தாயார் பிண்­டத்தை நோக்க லக் ஷ்மி  பிராட்­டியின் அருட்­பார்வை பெற்­ற­வுடன் அதற்கு கை, கால், உடம்பு எல்லாம் தோன்றி ஜீவனும் உண்­டாகி அழத்­தொ­டங்­கி­யது. குழந்­தையின் கையில் உள்ள பெரு­வி­ரலில் பால் சுரக்­கும்­படி லக் ஷ்மி பிராட்­டியார் அருள குழந்தை பசி எடுக்கும் போதெல்லாம் விரலைச் சுவைத்து பசி­யாற்­றிக்­கொண்டான். இந்நிகழ் வை அரிசமய தீபம் 24 ஆம் 25 ஆம் பாடல் விளக்குகின்றது. (தொடரும்) 

ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right