12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.01.2020 )..!

2020-01-28 08:45:02

28.01.2020 ஸ்ரீவி­காரி வருடம் தை மாதம் 14ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி காலை 8.02 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. சதயம் நட்­சத்­திரம் காலை 9.18 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. மர­ண ­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ஆயில்யம். சுப­நே­ரங்கள் காலை 7.30–8.30, மாலை 4.30–5.30, ராகு காலம் 3.00–4.30, எம­கண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.00–1.30. வார­சூலம் வடக்கு (பரி­காரம் – பால்) சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி விரதம். அங்­கா­ரக சதுர்த்தி வர­குந்த சதுர்த்தி மல்­லிகை பூக்­களால் சிவ­பூஜை செய்ய காரியத் தடைகள் விலகும்.

மேடம் : சிக்கல், சங்­கடம்

இடபம்         : உதவி, நட்பு

மிதுனம்         : நன்மை, யோகம்

கடகம் : சிரமம், தடை

சிம்மம் : அமைதி, நிம்­மதி

கன்னி : லாபம், லக்ஷ்­மீ­கரம்

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : அன்பு, பாசம்

விஷ்ணு பரத்­து­வத்தைக் கூறு­வது, விஷ­்ணு என்ற சொல்­லுக்கு 'எங்கும் பரந்­துள்­ளவன்' நன்மை செய்­பவன். அடி­ய­வர்­களை மாயையில் இருந்து விடு­விப்­பவன். எல்லாப் பொருட்­க­ளிலும் ஊடு­ருவி நிற்­பவன் என்­றெல்லாம் பொருள் கூறி­னாலும் 'பகவான்' என்ற சொல்­லையே பலர் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இத­னா­லேயே ஸ்ரீவைஷ்­ண­வத்தை பாக­வத சமயம், பாக­வத தருமம் என்று கூறு­கின்­றனர். பகவான் என்ற பெயரின் அடிச்சொல் ''பகம்'' என்­பது. ஆறு கல்­யாண குணங்­களை உடை­யவன் ‘‘பகவான்’’ என விளக்­குவர். தமி­ழர்­க­ளி­டையே பெரிதும் வழங்கும் சொல். ‘‘திரு­மால்’’ 'மால்' என்­ப­தற்கு அடி­ய­வர்­க­ளிடம் ‘‘வியா மோகம்’’ என்பர் பிறி­தொரு வாசு தேவன் என்­பது.        (நாளை தொடரும்)

சூரியன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 6

பொருந்தா எண்கள் 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right