29.04.2016 துர்­முகி வருடம் சித்­திரை மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-04-29 06:32:02

கிருஷ்ண­பட்ச ஸப்­தமி திதி மாலை 5.07 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் மாலை 5.58 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி சித்­த­யோகம் மாலை 5.58 வரை. பின்னர் மரண யோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூ­லம்–­மேற்கு (பரி­கா­ரம்–­வெல்லம்) பாவேந்தர் பார­தி­தாசன் பிறந்­தநாள். சுப முகூர்த்த நாள்.

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

இடபம் : உற்­சாகம், வர­வேற்பு

மிதுனம் : பணிவு, செல்­வாக்கு

கடகம் : புகழ், சாதனை

சிம்மம் : இன்பம், சந்­தோசம்

கன்னி : யோகம், அதிர்ஷ்டம்

துலாம் :களிப்பு, கொண்­டாட்டம்

விருச்­சிகம் : தொல்லை, சங்­கடம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : தெளிவு, நிம்­மதி

மீனம் ; உழைப்பு, உயர்வு

திரு­ம­ழி­சை­யாழ்வார் ஆழ்­வார்­களில் நான்­கா­மவர் திரு­மாலின் வலது கரத்தை அலங்­க­ரிக்கும் ஸ்ரீ சக்­க­ரத்­தாழ்­வாரின் அம்­ச­மாக அவ­த­ரித்­தவர். இவர் அருளிச் செய்த பிர­பந்­தங்கள் நான் முகன் திரு­வந்­தாதி திருச் சந்த விருத்தம் முத­லி­யன. திருச்­சந்த விருத்தம் நாலா­யிரத் திவ்ய பிர­பந்­தங்­களில் தனிச் சிறப்புக் கொண்­டது. நூற்று இரு­பது பாசு­ரங்­களை உடை­யது. இது சந்தக் கலி­வி­ருத்த யாப்பு வகையைச் சேர்ந்­தது. ஓசை நயம் மிகக்­கொண்­டது. ஒவ்­வொரு பாட்டும் தாள­வாத்­தி­யத்தை தட்­டு­வது போன்ற ஓசை நயத்­தோடு விளங்­கு­கின்­றது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று கணக்­கெல்லாம் போட்டு காண்­பிக்­கின்றார் ஆழ்வார். துள்ளல் ஓசையில் அமைந்­தது. பக்தி சார­ணான இவர் பாசு­ரங்­க­ளுக்கு பொரு­ளுரை எழு­துவது சற்று சிரமம். “துவா­ரகா” பதியை மனதில் நிறுத்தி எழுதத் தொடங்­கு­கின்றேன். நிச்­சயம் கைகூடும். இனி­வரும் நாட்­களில் இவர் பாசு­ரங்­களை அனு­ப­விப்போம். திரு­ம­ழி­சை­யாழ்வார் திரு­வ­டி­களே சரணம்.

(“உலகம் செழிப்­பாக இருப்­ப­தற்கு முக்­கி­ய­மா­னவை மூன்று அவை அன்பு, இரக்கம், கருணை) சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right