28.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 15ம் நாள் வியாழக்கிழமை

2016-04-28 09:53:55

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி மாலை 5.39 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 5.49 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய் பிறை சஷ்டி சித்தயோகம். கரிநாள் சுபம் விலக்குக.

சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30. பிற்பகல் 12.30 – 1.30 ராகு காலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 – 10.30 வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மிருக சீரிடம் திருவாதிரை.


மேடம்        :  பக்தி, ஆசி
இடபம்        :  வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம்        :  வரவு, லாபம்
கடகம்         :  துன்பம், கவலை
சிம்மம்        :  நிறைவு, பூர்த்தி
கன்னி        : பணிவு, பாசம்
துலாம்        : சிரமம், தடை
விருச்சிகம்    : அன்பு, இரக்கம்
தனுசு        : பாசம், அன்பு
மகரம்        : சுகம், ஆரோக்கியம்
கும்பம்        : நலம், நன்மை
மீனம்        : தொல்லை, சங்கடம்


குலசேகராழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழி ஸ்ரீராமர் தாலாட்டு “தன்னடி மேல் தாலேலோ என்றுரைத்த தமிழ் மாலை சொல்நவிலும் வேல்வலவன் குடைக் குலசேகரன் சொன்ன பன்னிய நூல்பத்தும் வல்லார் பாங்காய பக்தர்களே.

பொருளுரைச் வென்கொற்றக் குடைக்கீழ் அரசாண்ட குலசேகரர் அழிவில்லாத சிறந்த பெரிய மதில்கள் நாற்புறமும் சூழப்பெற்ற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் காருத்தனைத் தாயாக இருந்து பாமாலைகளினால் தாலாட்டி உள்ளார்.

இத் தமிழ்ப் பாசுரங்களைப் பக்தியோடு பாடுபவர்கள் பரந்தாமனுக்குப் பாங்கான பக்தர்களாவார்கள். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) ஸ்ரீராமர் தாலாட்டு முற்றிற்று. நாளை முதல் திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம்.


(“பிணிபோக்கும் மருந்துகளில் சிறந்தது பசி, உழைப்பு, வியர்வை)


சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று
அதிர்ஷ்ட எண்கள்:  1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right