12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.12. 2019 )..!

2019-12-27 08:51:45

27.12. 2019 ஸ்ரீவிகாரி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்கிலபட்ச பிரதமை திதி பகல் 11.26 வரை. அதன்மேல் துவிதியை திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 6.38 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. சித்த யோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை. கரிநாள் (சுபம் விலக்குக) சுபநேரங்கள் காலை 9.15–10.15. மாலை 4.45–5.45 ராகுகாலம் 10.30–12.00. எமகண்டம் 3.00–4.30. குளிகை காலம் 7.30–9.00. வாரசூலம்–மேற்கு (பரிகாரம்–வெல்லம்)

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்        : பயம், சஞ்சலம்

மிதுனம்      : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம்         : கவலை, கஷ்டம்

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : நோய், வருத்தம்

துலாம் : உறுதி, நம்பிக்கை

விருச்சிகம் : தனம், சம்பத்து

தனுசு : புகழ், பெருமை

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம்         : லாபம், லக்ஷ்மீகரம்

மீனம்          : ஜெயம், புகழ்

பெளஸ சுத்த பிரதமை. சந்திர தரிசனம். சாக்கியர் நாயனார் குருபூஜை. சகல விஷ்ணுவாலயங்களிலும் பகல் பத்து உற்சவ ஆரம்பம். அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பூஜை. ஸ்ரீ ஆண்டாள் தாயார் உற்சவம். திருப்பாவை நோன்பு. எதிர்வரும் 06.01.2020 தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் அதிகாலை ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எம்பெருமானின் சொர்க்கவாசல் திறக்கப் படும். சுவாமி பரமபதத்திலிருந்து எழுந்த ருளி அடியார்க்கு அருள் பாலிக்கும் திருக்காட்சி. மறுநாள் காலை துவாதசி தீர்த்தவாரி உற்சவம். நாளை முதல் ஸ்ரீவைகுண்டத்தைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.

செவ்வாய், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6–9

பொருந்தா எண்கள்: 2–3–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right