26.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-04-26 08:23:42

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி மாலை 5.13 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 4.02 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய் பிறை சதுர்த்தி. சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30. மாலை 04.30 – 5.30 ராகு காலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30 குளிகை காலம் 12.00 – 1.30 வார சூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)
மேடம்        :  நன்மை, அதிர்ஷ்டம்
இடபம்        :  உயர்வு, மேன்மை
மிதுனம்        :  உண்மை, நேர்மை
கடகம்         :  லாபம், லஷ்மீகரம்
சிம்மம்        :  கவனம், எச்சரிக்கை
கன்னி        : சுகம், ஆரோக்கியம்
துலாம்        : பகை, விரோதம்
விருச்சிகம்    : போட்டி, ஜெயம்
தனுசு        : புகழ், பாராட்டு
மகரம்        : அன்பு, பாசம்
கும்பம்        : தெளிவு, அமைதி
மீனம்        : அன்பு, இரக்கம்
குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி ஸ்ரீ இராமர் தாலாட்டு பாசுரம் “மலையதனா லணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே! அலைகடலைக் கடைந்த மரர்க்கமுதருளிச் செய்தவனே! கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே! சிலைவலவா சேவகனே! சீராமா! தாலேலோ! பொருளுரை – மலைகளைக் கொண்டு பாலம் கட்டி அரண்களையுடைய இலங்கையை நிர்மூல மாக்கியவனே! திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்தவனே. அறுபத்து நான்கு கலைகள் வாழும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருக்கும் என்கரிய வைரமே! கோதண்டத்தை வளைத்து பாணம் எய்வதில் வல்லமை கொண்ட வீரனே! ஸ்ரீராமா உன்னைத் தாலாட்டுகிறேன்.  (ஆழ்வார் திருவடிகளே சரணம்)


சனி, குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள்:  1, 5
பொருந்தா எண்கள்: 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right