12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.12.2019 )..!

2019-12-06 11:38:04

06.12.2019 ஸ்ரீவிகாரி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்கில பட்ச தசமி திதி நாள் முழுவதும். உத்தரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 11.46 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தாமிர்த யோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30 குளிகைகாலம் 7.30 – 9.00 வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) திதி திரிதியை பிருக்கு, சுபமுகூர்த்த நாள்.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : அச்சம், பகை

மிதுனம் : தனம், சம்பத்து

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : பிரயாணம், செலவு

கன்னி : சினம், பகை

துலாம் : முயற்சி, முன்னேற்றம்

விருச்சிகம் : சுபம், மங்களம்

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : நலம், ஆரோக்கியம்

கும்பம் : உற்சாகம், மகிழ்ச்சி

மீனம் : கோபம், அவமானம்

திரு­மங்­கை­யாழ்வார் அரு­ளிய எட்டாம் திரு­மொழி “பள்­ளி­யா­வது பாற்­கடல் அரங்கம் இரங்­கவன் பேய்­முலை பிள்­ளையாய் உயி­ருண்ட எந்தை பிரா­ணவன். பெரு­கு­மிடம் வெள்­ளியான் கரியன் மணி­நிற வண்ணன் என்று எண்ணி நாள்­தோறும் தெள்­ளியள் வணங்கும் மலைத் திரு­வேங்­கடம் அடை­நெஞ்­சமே! எம்­பெ­ருமான் பள்ளி கொள்­ளு­மிடம் திருப்­பாற்­க­டலும் ஸ்ரீரங்­க­மு­மாகும். பூத­னையின் ஸ்தனங்­களைக் குழந்தை வடிவில் உயி­ரோடு உறிஞ்­சி­யவன். கிரு­த­யு­கத்தில் வெண்­மை­யா­கவும், திரே­தா­யு­கத்தில் வெளுப்பும் கறுப்பும் கலந்­த­தா­கவும் துவா­பர யுகத்தில் நீல­மணி போன்றும் கலி­யு­கத்தில் பச்சை நிற­மா­கவும் இருப்­பவன் அவனை வழிபட திருவேங்கடத்தை சென்று அடைவாயாக நெஞ்சமே (தொடரும்)

(“முன் கவனமுள்ள ஒரு நண்பன் உன்னிடம் இருப்பதைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை” – யூரிபிடிஸ்)

சுக்கிரன், குரு ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண் : 9

பொருந்தா எண்கள் : 3–6–8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right